மனிதராக பிறந்த அனைவருக்குமே, தான் இருக்கும் நிலையை விட பல படிகள் மேலே சென்ற பிறகுதான் இறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக மிடில் கிளாஸில் பிறந்தவர்களுக்கு இது பேன்ற ஆசை கடைசி வரை நிராசையாகவே இருந்து விடுகிறது. ‘ஏழை கூட பணக்காரனாகி விடலாம், பணக்காரன் எப்போதும் பணக்காரன் ஆகிக்கொண்டுதான் இருப்பான். ஆனால், இந்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவனால்தான் பணக்காரனாக வாழ முடியாமலேயே போகிறது” என்று ஒரு சினிமா டைலாக் கூட இருக்கிறது. இதை உடைத்தெறிய சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரிவான நிதித் திட்டமிடல்:


ஒரு வலுவான நிதித் திட்டமிடலை உருவாக்குவது பணத்தை வாங்கி குவிப்பதர்கான முதல் படியாகும். நன்கு ஆராய்ந்து, வகுக்கப்பட்ட நிதித் திட்டமானது ஒருவரை ஓவர் நைட்டில் ஆளையே மாற்றி விடும். இதில், மிகவும் நுணுக்கமான வரவு செலவுத் திட்டம், லாபத்திற்கான இலக்கு அமைத்தல் ஆகியவை உள்ளடங்கும். 


செலவுகளுக்கு, முதலீடுகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும், அதில் எப்படி சேமிக்க வேண்டும் போன்றவை அந்த நிதி திட்டமிடலில் இருக்க வேண்டும். இதில் குறுகிய கால மற்றும் நெடுங்கால இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். இதில், அவசர கால நிதிகள், கடன் மேலான்மை, ஓய்வு கால நிதி ஆகிய அனைத்தும் அடங்கியிருக்க வேண்டும். 


நிதி அபாயங்களை ஆராய்தல்:


நீங்கள் தொடங்கும் தொழிலில் உள்ள லாபத்தை எவ்வாறு கணக்கு போடுகின்றீர்களோ, அதே போல அதில் இருக்கும் அபாயங்களையும் அந்த அபாயங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற உத்தியையும் தெரிந்திருக்க வேண்டும். அதனால், அதற்கு ஏற்றவாறு சில நிதி திட்டமிடல்களை வகுக்க வேண்டும். இந்த முதலீடுகளால் வேறு ஏதும் நிதி அபாயங்கள் ஏற்படவில்லை என்றாலும், இதிலிருந்து வரும் லாபங்கள் உங்களுக்கு கை கொடுக்கலாம். 


மேலும் படிக்க | உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..


தன்னம்பிக்கையை அதிகரித்தல்:


தொழிலை தொடங்குவதற்கு முன்னர் அல்லது மிகப்பெரிய வேலையில் இறங்குவதற்கு முன்னர் பலருக்கும் பயம் இருப்பது சகஜம். ஆனால், அந்த பயம் உங்களை விழுங்கி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த தொழில் தொடங்கினாலும் அதிலிருந்து வரும் ரிசல்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவத்துடன் எந்த வேலையிலும் இறங்க வேண்டும். நம்மை பற்றி நாமே குறைவாக எடைப்போட்டு கொள்வது, வேலைகளை தள்ளிப்போடுவது மற்றும் தோல்வி பயம் ஆகியவை நம்மை முன்னே செல்ல விடாமல் தடுக்கும் விஷயங்களாகும். எனவே, அவற்றை விட்டொழித்து முன்னேற்ற பாதையை தேர்ந்தெடுத்து அதை நோக்கி செல்லவும்.


நிலையான முதலீடு:


நீங்கள் எந்த தொகையுடன் ஒரு தொழிலை ஆரம்பிக்கிறீர்களோ, அந்த தொகை உங்கள் தொழிலில் எந்த ஏற்ற இறக்கம் வந்தாலும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது, உங்களுக்கு அவசர காலத்தில் கை கொடுக்கும் தொழிலாகவும் இருக்கலாம். 


லாபத்தில் சேமித்தல்:


தொழிலில் இருந்து வரும் லாபத்தை சேமித்துக்கொண்டிருந்தால் அது இரட்டிப்பாகாது. எனவே, அந்த லாபத்தை வேறு எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதில் தவறு இல்லை, ஆனால் அந்த லாபம் அனைத்தையும் வேறு எந்த பங்குகளிலும் முதலீடு செய்வதற்கு முன்னர் யோசிக்க வேண்டும். அனைத்து லாபங்களையும் மொத்தமாக முதலீட்டில் போடாமல், சிறிதளவை எடுத்து சேமித்து வைக்க வேண்டும்.


மேலும் படிக்க | லட்சங்களில் வருமானம் தரும் பேப்பர் நாப்கின் பிஸினஸ்... முத்ரா கடனுதவியும் கிடைக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ