Public Provident Fund: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. பணத்தை சம்பாதிப்பது, அதை சேமிப்பது, பாதுகாப்பது, அதன் மூலம் வருமானம் ஈட்டுவது, அதை பெருக்குவது என இதில் பல விஷயங்களில் கவனம் செலுத்தினால் வாழ்வில் நிதி நெருக்கடி ஏற்படாமல் நிம்மதியாய் இருக்கலாம். அனைவரும் தங்கள் வருமானத்தில் இருந்து ஒரு தொகையைச் சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெற விரும்புகிறார்கள். குறிப்பாக மாத சம்பளத்தில் பணிபுரியும் நடுத்தர மக்களுக்கு இது முக்கியமானதாக உள்ளது. அரசு நடத்தும் பிரபலமான திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) திட்டம் இதற்கு ஏற்றதாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசின் இந்த திட்டத்தில் தினமும் வெறும் 416 ரூபாய் சேமித்து, அதை முதலீடு செய்தால், சில வருடங்களில் கோடீஸ்வரராகலாம். இதை எப்படி செய்வது? இதற்கு எப்படி திட்டமிடுவது? இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம். 


PPF Interest Rate: 7.1% வட்டி


PPF திட்டம் பல வித பலன்களை அளிக்கின்றது. இதில், பணத்தின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே உத்தரவாதம் அளிக்கிறது. மறுபுறம், அதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தற்போது 7.1 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். எதிர்காலத்திற்காக ஒரு பெரிய நிதியை சேகரிக்க விரும்பும் நபர்கள், அதாவது, ஓய்வுக்குப் பிறகு பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல் இருக்க நினைப்பவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும்.


மேலும் படிக்க | EPS ஜாக்பாட் செய்தி: ரூ.9,000 குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் விரைவில்? அட்டகாசமான அப்டேட் இதோ


500 ரூபாயில் இருந்து முதலீட்டை துவக்கலாம்


- பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சிறிய தொகையில் முதலீட்டைத் தொடங்கலாம்.
- ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்யலாம். 
- இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
- எனினும், இதை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். 
- இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை முதிர்ச்சிக்கு அப்பால் நீட்டிக்கும் சூத்திரம் அவர்களை கோடீஸ்வரராக்கும்.


கோடீஸ்வரராகும் கணக்கீடு


ஒரு நாளைக்கு வெறும் 416 ரூபாயைச் சேமித்து, அதன் மூலம் கோடீஸ்வரராவது எப்படி? அதைப் பற்றி இங்கே காணலாம். 
- தினமும் ரூ.416 -ஐ சேமித்தால், மாதா மாதம் ரூ.12,500 -ஐ சேர்க்கலாம். 
- இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் சேமிக்கப்படும். 
- இந்த தொகையை PPF திட்டத்தில் முதலீடு செய்து, முதிர்ச்சியடைந்த பிறகு 10 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், அதாவது, டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதிர்வின் போது திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, ஐந்து ஐந்து ஆண்டுகளாக அதை நீட்டித்தால், முதலீட்டாளரின் முதலீடு 25 ஆண்டுகளில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆகிவிடும். 
- 7.1 சதவீத வட்டியின் அடிப்படையில் கணக்கிட்டால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு நேரத்தில் முதலீட்டாளரிடம் ரூ.1,03,08,015 இருக்கும்.


வரி விலக்கும் உள்ளது


PPF திட்டம் ஓய்வூதிய திட்டமாகவும் மிகவும் பிரபலமாக உள்ளது. இதுமட்டுமின்றி, இதில் முதலீடு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் வரியையும் சேமிக்கலாம். PPF திட்டத்தில் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கின்றது. இந்தத் திட்டத்தில் மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ முதலீடு செய்யலாம். பிபிஎஃப் முதலீட்டில் முதலீடு, பெறப்பட்ட வட்டி மற்றும் முதிர்ச்சியில் பெறப்பட்ட தொகை ஆகியவற்றுக்கு முற்றிலுமாக கரி விலக்கு கிடைக்கின்றது.


மேலும் படிக்க | முக்கிய ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவங்களுக்கு அபராதம்: ஆர்பிஐ அதிரடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ