EPFO Update: அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சார்பில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பொதுவாக ஊழியர்களுக்கு இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும். உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPF: பணம் எப்படி கழிக்கப்படுகிறது?


பணியாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவிகிதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. நிறுவனமும் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் 12% பங்களிப்பையும் டெபாசிட் செய்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில், 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கில் (EPF Account) வரவு வைக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை, அதாவது 8.33 சதவீத பணம் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) டெபாசிட் செய்யப்படுகிறது.


பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது?


பொதுவாக பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் கழிக்கபப்டும் தொகை டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா என்பதை சரிபார்ப்பதில்லை. பலர் தங்கள் இபிஎஃப் கணக்கில் லாக் இன் கூட செய்வதில்லை. ஆனால் இது தவறு. இதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இதை பிஎஃப் உறுப்பினர்கள் எளிதாக செய்யலாம். 


பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் தொகை சரியாக டெபாசிட் செய்யப்படுகிறதா என்பதை பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். இது உங்களுக்கு SMS மூலமும் தெரிவிக்கப்படும். அப்படி இல்லையென்றால் இதை செக் செய்வதற்கான வழிகள் என்ன? அதை பற்றி இங்கே காணலாம். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு காத்திருக்கிறதா? 8வது சம்பள கமிஷன்.. நிதிச் செயலாளர் அளித்த அப்டேட்


உங்கள் நிறுவனம் பணத்தை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறதா? எப்படி தெரிந்துகொள்வது?


இதற்கு உங்கள் EPF கணக்கின் பாஸ்புக்கை நீங்கள் செக் செய்ய வேண்டும். உங்கள் பாஸ்புக்கில் எப்போது எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்ற விவரங்கள் இருக்கும். இபிஎஃப்ஓ (EPFO) போர்ட்டலுக்கு சென்று இதை நீங்கள் செக் செய்யலாம். இதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன-


EPFO போர்ட்டலில் பாஸ்புக்கை இப்படி செக் செய்யலாம்: 


ஸ்டெப் 1- முதலில், https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற EPFO ​​போர்ட்டலுக்குச் செல்லவும். இதற்கு உங்களின் UAN (Universal Account Number)ஐ ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


ஸ்டெப் 2- போர்டல் திறந்தவுடன்,  'Our Services' டேபிற்குச் சென்று, ‘for employees’ என்ற ட்ராப்-டவுன் மெனுவைத் தேர்ந்தெடுக்கவும்.


ஸ்டெப் 3- சர்விஸ் காலமிற்கு கீழே உள்ள 'member passbook' என்பதைக் கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 4- உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் வழங்கப்பட்ட கேப்ட்சாவை உள்ளிட்டு லாக் இன் செய்யவும். 


ஸ்டெப் 5- லாக் இன் செய்ததும், உங்கள் PF இருப்பை உடனடியாகக் காண உங்கள் உறுப்பினர் ஐடி -யை உள்ளிடவும்.


ஸ்டெப் 6- இதற்குப் பிறகு உங்கள் EPF இருப்பு தெரியும். இதில், கணக்கு இருப்பு, அனைத்து வைப்புத்தொகை விவரங்கள், நிறுவன ஐடி, உறுப்பினர் ஐடி, அலுவலக பெயர், பணியாளர் பங்கு மற்றும் முதலாளி பங்கு பற்றிய தகவல்களையும் பெறுவீர்கள்.


இது தவிர, உமங் செயலி, மிஸ்ட் கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் இபிஎஃப் கணக்கு இருப்பை செக் செய்யலாம்.


மேலும் படிக்க | RBI 5 புதிய சிபில் விதிகள்: குஷியில் கஸ்டமர்ஸ்... வங்கிகளுக்கு இனி அதிக வேலை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ