தற்போது ஓய்வூதிய கால சேமிப்பில் முதன்மை வகிப்பது வருங்கால வைப்பு நிதி என்னும் பிஎப் கணக்கு ஆகும். நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் அல்லது தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்நிலையில், பி எஃப் கணக்கில் உள்ள இருப்பை அறிய உள்ள எளிய வழிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிஸ்டு கால் மூலம் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை அறிதல்


உங்களது பிஎஃப் கணக்குடன் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம், உங்கள் கணக்கில் இருப்பை அறியலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசியில் எண்ணில் இருந்து 996604425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, தகவலை பெறலாம். இதன் மூலம் இபிஎப்ஓவிலிருந்து உங்கள்பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பு குறித்த மெசேஜ் கிடைக்கும். இந்த சேவையைப் பெற யூ ஏ என் வலைதளத்தில், உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கே பி சி வழிமுறையை முடித்திருந்தால் மட்டுமே இந்த சேவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


EPFO இணையதளம் மூலம் இருப்பை அறிதல்


EPFO இணையதளத்தின் மூலம் இருப்பு விபரம் அறியும் வசதி உள்ளது. 


1. இந்த வசதியை பெற EPFO இணையதளத்திற்கு சென்று Our Services என்ற லிங்கினை கிளிக் செய்ய வேண்டும். 


2. பின்னர் For Employees என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர், Services என்பதை கிளிக் செய்து, Member Passbook என்பதை தேர்வு செய்ய வேண்டும். 


3. பின்னர் உங்களது பி.எஃப். பாஸ்புக்கை பார்க்க உங்களது UAN மற்றும் பாஸ்வேர்ட்டை பதிவு செய்தால் பாஸ்புக்கை காணலாம்.


இதில், ஓப்பனிங் மற்றும் க்ளோசிங் பேலன்ஸ் மற்றும் பணியாளர் மற்றும் முதலாளியின் பங்களிப்பு ஆகியவை குறித்த விபரங்களை முழுவதுமாக அறியலாம். PF கணக்கில் சேர்ந்துள்ள வட்டியின் அளவும் அறிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன தெரியுமா?


எஸ்.எம்.எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறியும் முறை


 உங்கள் UAN எண்ணை EPFOல் பதிவு செய்வதன் மூலம், எஸ்.எம்.எஸ். அனுப்பி உங்களது பி.எஃப். இருப்பை அறிந்து கொள்ளலாம். உங்கள் மொபைல் எண்ணிலிருந்து EPFOHO UAN ENG என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்ப வேண்டும். இதில் UAN என்பது உங்களது தனிப்பட்ட UAN எண் ஆகும். ENG என்பது நீங்கள் தகவல் பெற விரும்பும் மொழியின் முதல் மூன்று எழுத்து. நீங்கள் தமிழ் மொழியில் தெரிந்து கொள்ள விரும்பினால், அந்த மொழியின் முதல் மூன்று எழுத்துக்களைத் தட்டச்சு செய்யவும். EPFOHO UAN TAM என தகவல் அனுப்பவும்.


ஊழியர் வருங்கால வைப்பு நிதி


ஊழியரின் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம் அவர்களின் சம்பளக் கணக்கில் இருந்து, ஒவ்வொரு மாதமும், கழிக்கப்படும். அதனுடன், வேலை பார்க்கும் நிறுவனம் அல்லது முதலாளியும் ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளுக்குப் பணத்தைச் செலுத்துகிறார். PF கணக்கில் உள்ள பணத்திற்கு வருடாந்திர வட்டி கிடைக்கும். பிஎஃப் கணக்கிற்கு மோடி அரசாங்கம் 2022-23 நிதியாண்டிற்கு 8.15 சதவிகித வட்டியை அளிப்பதாக அறிவித்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வட்டி விகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Modi 3.0... பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தில் புல்லட் ரயில்... ரயில்வே அமைச்சர் பகிர்ந்த வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ