உங்கள் பான், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை கண்டறிவது எப்படி?
பான் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வருமான வரித் துறையின் இணையதளமான incometax.gov.in-க்கு செல்ல வேண்டும்.
இந்திய குடிமகன்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. நமது மற்ற முக்கிய ஆவணங்களையும் ஆதார் அட்டையுடன் இணைக்க சொல்லி அரசு கூறி வருகிறது. இதுவரை வங்கி கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு, மொபைல் எண் போன்ற அனைத்து முக்கியமான ஆவணங்களையும் ஆதார் அட்டையுடன் இணைத்துள்ள நிலையில் அரசு நீண்ட காலமாக பான் கார்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கும்படி மக்களை அறிவுறுத்தி வருகிறது. போலி பான் கார்டுகளை களைவதற்காக அரசு ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க கூறியுள்ளது. ஏற்கனவே அரசு பான் கார்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கும் செயல்முறைக்கு பல தடவை காலக்கெடு வழங்கியது, ஆனால் இன்னும் சிலர் இந்த செயல்முறையை செய்யவில்லை.
மேலும் படிக்க | EPFO முக்கிய தகவல்: இதை செய்யாவிட்டால் பெரிய இழப்பீடு செலுத்தவேண்டும்!!
இந்நிலையில் இறுதியாக அரசு மார்ச் 31,2023க்குள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் இல்லாவிட்டால் பான் கார்டுகள் செயலிழந்து விடும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் ரூ.1000-ஐ அபராதமாக செலுத்துவதன் மூலம் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையை இணைக்க முடியும் என்று அரசு கூறியுள்ளது. ஆதார் அட்டை செயலிழந்தால் அதற்கு பின்னர் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அந்த நபரே பொறுப்பாவார் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பான் கார்டுகள் செயலிழந்தால் ஐடி ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்யமுடியாது மற்றும் நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப்பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பான் கார்டை, ஆதார் அட்டையுடன் இணைத்துவிட்ட நபர்களுக்கு சில சமயம் இந்த செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறிவிட்டதா என்கிற யோசனை வரும். இனிமேல் நீங்கள் யோசிக்க வேண்டாம், கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி உங்கள் பான் கார்டு, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரிபார்க்கலாம்.
1) பான் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முதலில் வருமான வரித் துறையின் இணையதளமான incometax.gov.in-க்கு செல்ல வேண்டும்.
2) இப்போது 'லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததும், ஒரு புதிய டிஸ்பிளே திறக்கும்.
3) அதில் நீங்கள் 'வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் ' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
4) இப்போது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் திரையில் ஒரு செய்தி தோன்றும், இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் விவரங்களைப் பூர்த்தி செய்து இணைக்கலாம்.
மேலும் படிக்க | PF சூப்பர் செய்தி!! ஊழியர்களுக்கு ரூ. 40,000 கிடைக்கும், விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ