நிறுவனம் பிடித்தம் செய்யும் தொகை உங்கள் பிஎஃப் கணக்கில்தான் செல்கிறதா? எப்படி செக் செய்வது?
EPFO Update: பிஎஃப் கணக்கில் பணம் தவறாமல் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பது பற்றிய செய்தி எஸ்எம்எஸ் மூலம் வரும்.
EPFO Update: பிஎஃப் என்று பொதுவாக அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி பற்றிய பல புதுப்பிப்புகள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளன. பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இதில் ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தொகை ஊழியரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதே அளவு தொகையை ஊழியரின் நிறுவனமும் அவரது பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. பொதுவாக, பிஎஃப் என்பது ஓய்வூதிய கார்பஸை நோக்கிய முதல் படியாக பார்க்கப்படுகின்றது. குறிப்பிடத்தக்க வகையில், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் தாங்களாகவே இபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய மாட்டார்கள். மாறாக அந்த ஊழியர் பணிபுரியும் நிறுவனம் தான், அவரது சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் கழித்து, அந்த தொகையை அவரது பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. பிஎஃப் கனக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசாங்கம் வட்டியும் அளிக்கின்றது.
பிஎஃப் பணம் எவ்வாறு கழைக்கப்படுகின்றது
பிஎஃப் கழிப்பை பற்றி பார்த்தால், நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்வதற்காக ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 12 சதவீதத்தை பிடித்தம் செய்கிறது. அதே நேரத்தில், நிறுவனமும் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் 12 சதவீதத்தை வழங்குகிறது. நிறுவனத்தின் பங்களிப்பில், 3.67 சதவீதம் இபிஎஃப் (EPF) கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மீதமுள்ள 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) டெபாசிட் செய்யப்படுகிறது.
பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு செக் செய்வது?
பிஎஃப் கணக்கில் பணம் (EPF Amount) தவறாமல் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பது பற்றிய செய்தி எஸ்எம்எஸ் மூலம் வரும். அல்லது, அதை அவர்கள் சரிபார்க்க வேண்டும்.
டெபாசிட் செய்யப்பட்ட பணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள, ஒரு ஊழியர் பிஎஃப் கணக்கின் பாஸ்புக்கைச் செக் செய்ய வேண்டும். ஒரு ஊழியர் தனது பாஸ்புக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையின் விவரங்களைக் காணலாம். இபிஎஃப்ஓ (EPFO) போர்ட்டலுக்குச் சென்று ஊழியர்கள் இதைச் சரிபார்க்கலாம்.
EPFO போர்ட்டலில் பாஸ்புக்கை செக் செய்வதற்கான வழிமுறை இதோ:
- https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இல் EPFO போர்ட்டலுக்கு செல்லவும்.
- உங்களின் UAN (யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்) செயல்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- முகப்புப்பக்கத்தில், ‘Our Services’ டேபைக் கண்டறிந்து, ட்ராப் டவுன் மெனுவிலிருந்து ‘Employees’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேவை நெடுவரிசைக்கு கீழே அமைந்துள்ள ‘Member Passbook’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் வழங்கப்பட்ட கேப்ட்சாவை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
- லாக் இன் செய்ததும், உங்கள் PF இருப்பை உடனடியாகக் காண உங்கள் உறுப்பினர் ஐடி -யை உள்ளிடவும்.
உமங் செயலி மூலம் இந்த வகையில் செக் செய்யலாம்
- உமங் ஆப் பல அரசு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது.
- EPF-க்கு, Google Play Store அல்லது Apple App Store இலிருந்து UMANG செயலியை பதிவிறக்கவும்.
- உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.
- பின்னர், "அனைத்து சேவைகள்" டேபின் கீழ், 'EPFO' ஐத் சர்ச் செய்யவும்.
- 'பணியாளர் மைய சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் ‘பாஸ்புக்கைக் காண்க’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட UAN மற்றும் OTP ஐ உள்ளிடவும்.
- இதில் லாக் இன் செய்தவுடன் நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் EPF இருப்பைக் காணலாம்.
மேலும் படிக்க | EPFO வைப்பு நிதி உங்கள் அருகில்: தமிழ்நாட்டில் நவம்பர் 28ம் தேதி சிறப்பு முகாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ