குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
சிறு தொழில் செய்பவர்கள், நல்ல லாபம் பார்ப்பதற்கு சில உத்திகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் சுய தொழில்களும், சுய தொழில் செய்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். இதற்கு காரணம், பல இளைஞர்கள் சில ஆண்டு வேலை அனுபவத்திற்கு பிறகு, ஒரு நிறுவனத்தை தொடங்க ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு காரணம், பலர், யாருக்கும் கீழ் வேலை பார்ப்பதை விரும்புவதில்லை. இப்படி தாெழில் தொடங்குவது, ஒரு சிலருக்கு லாபத்தையும் சிலருக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம், தங்களின் தொழிலை சரியாக சந்தை படுத்த தெரியாமல் இருப்பதுதான் என்று சில பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி மார்கெட்டிங் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ சில டிப்ஸ்..
வாடிக்கையாளர்கள் யார் என்பதை நிர்ணயிக்கலாம்:
சுய தொழிலை ஆரம்பிப்பவர்கள், தான் யாருக்காக இந்த தொழிலை ஆரம்பித்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் அழகு சாதன பொருட்கள் அல்லது, ஆடை ஆபரணங்கள் செய்யும் தொழிலை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் அது இளம் வயது பெண்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும். இது, இந்த தொழிலில் மட்டுமல்ல சாஃப்ட்வேர், ஆப்கள், புதிய தளம் என அனைத்திற்கும் பொருந்தும்.
சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த வேண்டும்..
சமூக வலைதளங்களில் உங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். தற்போதைய இளைஞர்கள் பலர் ஃபேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கின்றனர். ஆனால், 80-90களில் மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள், ஃபேஸ்புக் தளத்தில் ஆக்டிவாக இருக்கின்றனர். எனவே, உங்கள் டார்கெட் ஆடியன்ஸிற்கு ஏற்றவாறு பதிவுகளை தயார் செய்து பதிவிட வேண்டும். இதனால் உங்களது பொருட்கள், சிறு தொழில்கள் செல்ல வேண்டியவர்களை சென்றடையும்.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! ரூ. 15000ல் இருந்து ரூ. 21000 ஆக உயரும் அடிப்படை சம்பளம்!
தள்ளுபடி:
அதிக தள்ளுபடி, நம்ப முடியாத தள்ளுபடி ஆகியவை உங்களது வாடிக்கையாளர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரவழைக்காமல் செய்யும். எனவே, அனைவரது பர்சிற்கும் ஏற்றவாறு தள்ளுபடிகளை நிர்ணயிக்கலாம். ஆடி மாதம், பண்டிகை காலங்களில் தள்ளுபடி என பல வகைகளில் தள்ளுபடிகளை நிர்ணயிக்கலாம். இதனால், உங்களது வியாபாரம் அதிகரிக்கலாம்.
சரியான ஊழியர்கள்..
சிறு தொழில், ஓரளவிற்கு பெரிதான வளர்ச்சி அடையும் வகையில் இருந்தால் அதற்காக ஊழியர்களையும் நிர்ணயிக்கலாம். சமூக வலைதள மேற்பார்வையாளர், மார்கெட்டிங் செய்வதற்கும், க்ளையன்ட் பிடிப்பதற்குமான ஊழியர் உள்ளிட்டவர்களை நிர்ணயிக்கலாம். அதோடு மட்டுமன்றி, அவர்களை மேற்பார்வையும் செய்யலாம்.
இணை பொருட்கள்..
நீங்கள், எந்த பொருட்களை விற்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பொருளை மட்டும் பிரபலப்படுத்தி விற்கலாம். ஆனால், நீங்கள் விற்க நினைக்கும் பொருளுக்காக ஒரு இணையதளத்தை உருவாக்கும் போது, உங்களது இணை பொருட்களையும் சேர்ந்து அதில் விற்கலாம். உதாரணத்திற்கு ஒரு புத்தக கடை இருக்கிறது என்றால், அங்கு புத்தகம் மட்டும் இருக்காது. பேனா, பேப்பர் போன்ற பிற ஸ்டேஷனரி பொருட்களும் இருக்கும். அது மட்டுமன்றி புத்தகத்தில் வைக்கும் புக் மார்க்ஸ்களும் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ