LIC Policy Revival: லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா (Life Insurance Corporation) தனது வாடிக்கையாளர்களான எல்ஐசி பாலிசிதாரர்களுக்காக பல வகையான திட்டங்களை நடத்துகிறது. எல்ஐசி -இன் பெரும்பாலான திட்டங்கள் நீண்ட காலத்திற்கான திட்டங்களாக உள்ளன. எல்ஐசி பாலிசி என்பது மிகவும் பாதுகாப்பான, பலரது நம்பகத்தை பெற்ற ஒரு பாலிசியாக இருந்து வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நேரங்களில் சில காரணங்களால் பாலிசிதாரர்களால் தொடர்ந்து சில பிரீமியத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் பாலிசி பாதியிலேயே நிறுத்தப்படும். ஆனால், இதற்கான சில விதிகள் உள்ளன. இவற்றின் உதவியுடன் பாலிசிதாரர்கள் மீண்டும் பாலிசியை தொடரலாம். அவற்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.


ஒரு பாலிசி நிறுத்தப்படும் போதெல்லாம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதை ரிவைஸ் செய்வதற்கான வாய்ப்பை காப்பீட்டு நிறுவனம் வழங்குகிறது. ஆகையால், நிறுத்தப்பட்ட பாலிசிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. நீங்கள் மூடப்பட்ட எல்ஐசி பாலிசியை (LIC Policy) மீண்டும் தொடங்க விரும்பினால், அதைச் செய்வதற்கான வழி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி இங்கே காணலாம். .


எல்ஐசி பாலிசியை மறுதொடக்கம் செய்வதற்கான வழிமுறை இதோ


- எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க பாலிசிதாரர் முதலில் நிலுவையில் உள்ள அனைத்து பிரீமியங்களையும் வட்டியையும் செலுத்த வேண்டும். 
- பாலிசியை மறுதொடக்கம் செய்ய, பாலிசிதாரர் (Policy Holder) முகவர் அல்லது கிளைக்குச் சென்று எல்ஐசி பாலிசி திருத்தச் செயல்முறையை முடித்துக்கொள்ளலாம்.
- இது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால், வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து இதை பற்றி விசாரிக்கலாம். 
- பாலிசியை புதுப்பிக்க தேவைப்படும் ஸ்பெஷல் ரிப்போர்ட் அல்லது மெடிக்கல் ரிப்போர்ட் ஆகியவற்றை பாலிசிதாரர் வழங்க வேண்டும்.


மேலும் படிக்க | உங்கள் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வது எப்படி? இதற்கான RBI விதிகள் என்ன?


Unclaimed Amount என்றால் என்ன?


பல நேரங்களில், கணக்கு வைத்திருப்பவர்கள் பல்வேறு பிரச்னைகளால் பிரீமியத்தை டெபாசிட் செய்ய முடியாமல் போகிறது. அவர்கள் பாலிசியை சரண்டர் செய்யாமலும் விட்டு விடுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அந்த பாலிசிதாரர்களின் பணம் எல்ஐசி இடமே இருக்கிறது. இந்த நிலையில், பாலிசிதாரர் ஏதேனும் காரணத்தால் இறந்துவிட்டு, நாமினி அந்தத் தொகையை பல ஆண்டுகளாகக் கோரவில்லை என்றால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்தப் பணம் கோரப்படாத தொகையாக அதாவது அன்கிளெய்ம்ட் தொகையாகக் கருதப்படும். இப்படிப்பட்ட உரிமை கோரப்படாத பணத்தை சரிபார்க்கும் வசதியையும் எல்ஐசி வழங்குகிறது.


கோரப்படாத தொகையை செக் செய்வது எப்படி?


- கோரப்படாத தொகையைச் சரிபார்க்க, முதலில் நீங்கள் எல்ஐசி -யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். 
- இதற்குப் பிறகு பக்கத்தின் கீழே சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளில், Unclaimed Amounts of Policyholders என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறன்னர் ஒரு சாளரம் திறக்கும்.
- அதில் பாலிசி எண், பாலிசிதாரரின் பெயர், பிறந்த தேதி மற்றும் பான் கார்டு எண் பற்றிய தகவல்களை வழங்குமாறு கேட்கப்படும். 
- இந்தத் தகவலைக் கொடுக்க வேண்டும்.
- அதன் பின்னர், சப்மிட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- LIC -இல் உங்களால் கோரப்படாத உங்கள் பணம் ஏதேனும் இருந்தால், சப்மிட் பட்டனை கிளிக் செய்தவுடனேயே அது தெரிந்துவிடும். 
- உங்கள் பணம் இருநால், அதை பெற, தொகையை க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | புதிய வங்கிக்கணக்கை EPF கணக்குடன் இணைப்பது எப்படி? முழு செயல்முறை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ