நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பல முக்கியமான சேவைகளை வழங்கி வருகின்றது.  பாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே சேமிப்புக் கணக்கின் வங்கிக் கிளையை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றிக் கொள்ளலாம். இன்டர்நெட் பேங்கிங் மூலம், உங்கள் எஸ்பிஐ கணக்கின் கிளையை மற்றொரு கிளைக்கு விரைவாக மாற்றிக்கொள்ள முடியும்.  வங்கி வழங்கும் ஆன்லைன் சேவையை பயன்படுத்தி உங்கள் எஸ்பிஐ சேமிப்புக் கணக்கின் கிளையை மாற்றுவதற்கான கோரிக்கையை உள்ளிட, நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் வங்கிக் கிளையின் கிளைக் குறியீடு உங்களுக்குத் தேவைப்படும்.  மேலும் நீங்கள் இணைய வங்கி சேவையை பயன்படுத்தத் தொடங்கி, உங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்ய வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புதிய விதிகள் - இந்திய ரயில்வே!


எஸ்பிஐ வங்கிக் கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு ஆன்லைனில் மாற்றுவதற்கான படிப்படியான செயல்முறை:


1) முதலில் எஸ்பிஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான onlinesbi.com என்கிற பக்கத்திற்குள் நுழைய வேண்டும்.


2) 'பெர்சனல் பேங்கிங்' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


3) பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை கிளிக் செய்ய வேண்டும்.


4) இதற்குப் பிறகு உங்களுக்கு முன்னால் இ-சேவை என்ற டேப் இருக்கும், அதைக் கிளிக் செய்யவும்.


5) டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டிய சேமிப்புக் கணக்கைக் கிளிக் செய்யவேண்டும்.


6) மாற்றப்பட வேண்டிய உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.


7) நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் கிளையின் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை எழுதவேண்டும்.


8) அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்து, உறுதிசெய்வதற்கான பட்டனை அழுத்த வேண்டும்.


9) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும், அதனை நிரப்பி பின்னர் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.


10) சில நாட்களுக்குப் பிறகு, உங்கள் கணக்கு நீங்கள் கோரிய கிளைக்கு மாற்றப்படும்.


யோனோ ஆப் அல்லது யோனோ லைட்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் நீங்கள் வங்கி கிளையை மாற்றிக்கொள்ளலாம்.  ஓடிபி இல்லாமல் கணக்கைப் அப்டேட் செய்ய உங்கள் மொபைல் எண் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.  பொதுவாக கொரோனா தொற்றுநோய் காரணமாக அனைத்து விதமான சேவைகளும் ஆன்லைனிலேயே நடைபெற்று வரும் நிலையில், எஸ்பிஐ வங்கியும் தனது அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்குகிறது.  எனவே எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் இனிமேல் எந்தவொரு பணியையும் முடிக்க வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை, வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலேயே தங்களது வேலைகளையும் செய்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | Old Pension திட்டத்தில் முக்கிய மாற்றும்..புதிய அப்டேட்டை வெளியிட்ட அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ