எல்ஐசி பாலிசிக்கு எதிரான கடன்:  திடீர் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய,  பெரும்பாலானோர் செய்வது, நெருங்கிய நண்பரின் உதவியைப் பெறுவது அல்லது தனிநபர் கடன் வசதி. இந்நிலையில், அதிக வட்டி விகிதமும் மோசமான சிபில் ஸ்கோரும் தனிநபர் கடன் வாங்குவதில் சிக்கலை ஏற்படுத்தினால், நீங்கள் எல்ஐசி கடனை முயற்சிக்கவும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CIBIL ஸ்கோரும் தனிநபர் கடன் வட்டி விகிதமும்


தனிநபர் கடனில், நீங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் போது, குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனைப் பெற உங்கள் CIBIL ஸ்கோர் அதிகமாக இருக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால், நீங்கள் அதிக வட்டி விகிதத்தில் தனிநபர் கடனைப் பெறுவீர்கள். அசல் மீது அதிக வட்டி செலுத்த வேண்டும். ஆனால் உங்கள் பெயரில் எல்ஐசி பாலிசி இருந்தால், இந்த பாலிசிக்கு எதிராக நீங்கள் கடனைப் பெறலாம். 
இந்தக் கடனின் நல்ல விஷயம் என்னவென்றால், இது உங்கள் CIBIL ஸ்கோரை பாதிக்காது. அதுமட்டுமின்றி, தனிநபர் கடனை விட வட்டி விகிதம் குறைவாக உள்ளது. இந்த பதிவில், எல்ஐசி பாலிசிக்கு எதிரான கடன் பெற (Loan Tips) நிபந்தனைகள் மற்றும்  அதன் நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.


எல்ஐசி பாலிசிக்கு எதிராக கொடுக்கப்படும் கடன்


இந்த கடன், எல்ஐசி பாலிசிக்கு எதிராக கொடுக்கப்படும். ஏனெனில் இந்த கடன் பெறும் போது, உங்கள் காப்பீட்டு பாலிசி அடமானம் வைக்கப்படுகிறது.  கடன் வாங்குவதற்கான  முதல் நிபந்தனை என்னவென்றால், உங்களிடம் எல்ஐசி பாலிசி இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | IMPS New Service: பணம் அனுப்புவது சுலபமானது... 5 லட்சம் வரை அனுப்ப இனி இதை செய்ய வேண்டாம்


கடன் பெறுவதற்கான நிபந்தனைகள்


1. உங்களிடம் எல்ஐசி பாலிசி இருக்க வேண்டும்.


2. நீங்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் 


3. குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாக அந்த பாலிசிக்கான வருடாந்திர பிரீமியத்தை செலுத்தி இருக்க வேண்டும்.


கடனாக கிடைக்கும் தொகை


உங்களுக்கு வழங்கப்படும் கடனின் அளவு எல்ஐசி பாலிசியின் சரண்டர் மதிப்பைப் பொறுத்தது. காப்பீடு செய்தவர் பாலிசியை அதன் முதிர்வுக்கு முன் ஒப்படைத்தால், காப்பீட்டு நிறுவனம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை திருப்பித் தருகிறது.  இது சரண்டர் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, கடன் தொகை பாலிசி மதிப்பில் 90 சதவீதம் வரை இருக்கும். செலுத்தப்பட்ட பாலிசிகளுக்கு, இந்தத் தொகை பாலிசி மதிப்பில் 85 சதவீதம் வரை இருக்கும்.


கடனுக்கான வட்டி மற்றும் EMI


 எல்ஐசி கடனுக்கான வட்டி விகிதம் 10-13 சதவீதம் வரை இருக்கலாம். எனினும்,  இது தனிநபர் கடனை விடக் குறைவு. மேலும் இதில் வசதிக்கேற்ப தவணை செலுத்தலாம். எல்ஐசி பாலிசிக்கு எதிரான கடனின் ஒரு நன்மை என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் EMI செலுத்துவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் வட்டியும் சேர்த்துக்கொண்டே இருக்கும். இருப்பினும், நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த தவறினால், உங்கள் பாலிசி முதிர்ச்சியடைந்தவுடன், கடன் தொகை வட்டியுடன் கழிக்கப்பட்டு மீதமுள்ள பணம் உங்களுக்கு வழங்கப்படும்.


எல்ஐசி பாலிசிக்கு எதிராக கடனுக்கு விண்ணப்பிக்கும் முறை


எல்ஐசி பாலிசிக்கு எதிராக கடன் பெற, ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைனில், நீங்கள் LIC அலுவலகத்திற்குச் சென்று KYC ஆவணங்களுடன் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க, எல்ஐசி இ-சேவைகளுக்கு பதிவு செய்யவும்.


இதற்குப் பிறகு, உங்கள் கணக்கில் உள்நுழையவும்.


இதற்குப் பிறகு, உங்கள் காப்பீட்டுக்கு எதிராக கடனைப் பெற நீங்கள் தகுதியுள்ளவரா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்.


ஆம் எனில், கடன் விதிமுறைகள், நிபந்தனைகள், வட்டி விகிதங்கள் போன்றவற்றைக் கவனமாகப் படிக்கவும். இதற்குப் பிறகு, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, KYC ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றவும்.


மேலும் படிக்க | RBI 5 புதிய சிபில் விதிகள்: குஷியில் கஸ்டமர்ஸ்... வங்கிகளுக்கு இனி அதிக வேலை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ