Lakshmi Vilas Bank வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது -நிதி அமைச்சகம்
லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று மாலை முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
புதுடெல்லி: லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று மாலை முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி நிதியமைச்சகம் அறிவிக்கும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு லட்சுமி விலாசு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். அவசரத் தேவைகளுக்கு என்ன செய்வது என்ற கவலை எழுகிறது.
அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்று தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவசர செலவுகள், மருத்துவ சிகிச்சை, கல்வி கட்டணம் செலுத்துதல், திருமண செலவுகள் என முக்கியமான செலவுகளுக்கு விலக்கும், தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு, மத்திய ரிசர்வ் வங்கி RBI-இன் அனுமதி தேவைப்படும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, தி லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் (The lakshmi vilas bank) நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருவதால், வங்கியின் நிகர மதிப்பு குறைந்துள்ளது, இதனால், என்.பி.ஏ அதிகமாகியிருக்கிறது. நஷ்டங்கள் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியின் இந்த சரிவுக்கு காரணங்கள் என்று பார்த்தால், நிகர மதிப்பு எதிர்மறையாக சென்றது முதல் காரணம். அடுத்து, தொடர்ந்து ஏற்பட்ட நட்டங்களை சமாளிக்க போதுமான மூலதனத்தை திரட்ட முடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புகளை தொடர்ந்து திரும்பப் பெற்று வருகின்றனர் என்பதோடு, வங்கியின் பணப்புழக்கமும் குறைந்துவிட்டது.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே லட்சுமி விலாஸ் வங்கி prompt corrective action (PCA) எனப்படும் உடனடி திருத்த நடவடிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த முதலீட்டாளர்களுடன் இன்னும் உடன்பாடு எட்டியதாக தெரியவில்லை. எனவே, வங்கியில் பணம் வைத்துள்ள வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமையகம் கரூரில் அமைந்துள்ளது. கரூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள வணிகர்களுக்கும் உழவர்களுக்கும் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்காக, வி. எஸ். என். ராமலிங்க செட்டியார் தலைமையில் கரூரின் ஏழு தொழிலதிபர்கள் ஒன்றாக இணைந்து 1926 நவம்பர் 3ஆம் தேதியன்று கரூரின் ஏழு தொழிலதிபர்கள் வங்கியை தோற்றுவித்தனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR