Union Budget 2025: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.  நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களும், பல துறைகளை சார்ந்தவர்களும் இந்த பட்ஜெட்டில் தங்களுக்கு வரக்கூடிய அறிவிப்புகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள், வரி செலுத்தும் நபர்கள், சம்பள வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள் என இவர்கள் வரி முறைகளில் மாற்றங்கள் வரக்கூடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தனது எட்டாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் நடுத்தர வர்க்கத்தினரின் செலவழிப்பு வருமானத்தை அதிகரித்து, நீண்டகால நிதி வளர்ச்சியை ஊக்குவிக்க ஏதுவான அறிவிப்புகளை அவர் வெளிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாமானிய மக்களுக்கு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை இந்த பட்ஜெட் ஏற்படுத்துமா? வரிச்சலுகைகள் அதிகரிக்குமா? இவற்றுக்கான பதிலை கண்டறிய சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும். 


இதற்கிடையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி விதிப்பில் நிவாரணம் அளிக்கும் வகையில் வரக்கூடிய 3 முக்கிய சாதகமான அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


Standard Deduction: நிலையான விலக்கு வரம்பு


நிலையான விலக்கு என்பது வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து கழிக்கக்கூடிய ஒரு நிலையான தொகையாகும். புதிய வரி முறையில் (New Tax Regime) இதில் சில மாற்றங்களை அரசாங்கம் பரிசீலிக்கலாம் என கூறப்படுகின்றது. சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான விலக்கு தற்போது ரூ.75,000 ஆகும், இதை ரூ.1 லட்சமாக அரசு உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அதிகமானால், வரி விதிக்கக்கூடிய வருமானத்தின் அளவு குறையும். 


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.


- ஒருவரது மொத்த ஆண்டு ஊதியம் ரூ.10,000,000 என்று வைத்துக்கொள்வோம்.
- ரூ.75,000 நிலையான விலக்குக்குப் பிறகு அவரது வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ.9,25,000 ஆக இருக்கும். 
- நிலையான விலக்கு வரம்பு ரூ.1,00,000 ஆக உயர்ந்தால், அவரது வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ.9,000,000 ஆக மாறும்.


Income Tax Rebate: வருமான வரி தள்ளுபடி


வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 87A இன் கீழ் ரூ.7 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் உள்ளவர்கள் தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள். இதன் மூலம் ரூ.7 லட்சம் வரையிலான வருமானம், வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வரம்பை அரசு ரூ.1 லட்சம் அதிகரிக்கலாம் என்றும் இதன் மூலம் வரியிலிருந்து விலக்கு பெறும் வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உயரலாம் என்றும் நிதி நிபுணர்கள் கருதுகிறார்கள்.


Tax Slabs: புதிய வரி அடுக்குகள்


புதிய வரி முறையில் உள்ள வரி அடுக்குகளை மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் மாற்ற வாய்ப்புள்ளது. புதிய வரி முறையை மக்கள் மத்தியில் பிரபலமாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்கின்றது. அதன் ஒரு பகுதியாக வரி அடுக்குகளில் மாற்றங்கள் செய்யப்படலாம்.


புதிய வரி முறையில் வரி அடுக்குகள் பின்வருமாறு திருத்தப்படலாம்:


ரூ.4 லட்சம் வரை வருமானம் - வரி இல்லை


ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5%


ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை - 10%


ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை - 15%


ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை - 20%


ரூ.15 லட்சத்திற்கு மேல் - 30%


இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டால் புதிய வரி முறை வரி செலுத்துவோருக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும் என நம்பப்படுகின்றது. இதன் மூலம் வரி செலுத்துவோர் அதிக பணத்தை மிச்சப்படுத்தலாம். அவர்களின் செலவழிப்பு வருமானமும் அதிகரிக்கும். 


Old Tax Regime: பழைய வருமான வரி முறையில் மாற்றங்கள் வருமா?


புதிய வரி முறையை பிரபலமாக்குவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆகையால் இந்த முறை பழைய முறையில் மாற்றங்களுக்கான சாத்தியம் குறைவாக உள்ளதாகவே வரி நிபுணர்கள் கருதுகிறார்கள். 


மேலும் படிக்க | CGHS முக்கிய அப்டேட்: அரசு ஊழியர்கள், ஓய்வூத்யதாரர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள்


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 1 முதல் லெவல் 10 வரை.... யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ