Share Market: கொரோனாவால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி! 42994 கோடி இழந்த ரிலையன்ஸ்
Share Market Hit: கொரோனா தொடர்பாக இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிவுறுத்தலால் பங்குச் சந்தை ஆட்டம் கண்டது, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு
நியூடெல்லி: பல நாடுகளில், மீண்டும் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, இந்திய அரசும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. சமீபத்தில், கொரோனா தொடர்பாக அரசாங்கம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. சீனாவில் அதிகரித்துள்ள கொரோனா பரவலால், அந்நாட்டின் மருத்துவமனைகளில், பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே, தொடர்ந்து வேலை செய்கிறார்கள்.
இந்திய பங்குச் சந்தையிலும் அது எதிரொலித்தது. இந்த வாரம் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சியால் பல நிறுவனங்களின் பங்குகளில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், சந்தை மூலதனத்தைப் பொறுத்தவரை, முதல் 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் கடந்த வாரம் 1,68,552.42 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் செய்தியானது, பங்குச் சந்தையிலும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி, முதலீட்டாளர்களுக்கு இடியான செய்தியாய் இறங்கியுள்ளது.
கடந்த வாரம் சென்செக்ஸ் 1,492.52 புள்ளிகள் (2.43%) இழந்தது. சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் அதிகரித்து வரும் கோவிட் தொற்றுக்கு மத்தியில் சந்தை பலவீனமாகவே இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.42,994.44 கோடி குறைந்து ரூ.16,92,411.37 கோடியாக உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் சந்தை மதிப்பு ரூ.26,193.74 கோடி குறைந்து ரூ.5,12,228.09 கோடியாக உள்ளது.
எச்டிஎஃப்சி வங்கியின் மதிப்பு ரூ.22,755.96 கோடி குறைந்து ரூ.8,90,970.33 கோடியாகவும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ரூ.18,690.03 கோடி குறைந்து ரூ.4,16,848.97 கோடியாகவும் இருந்தது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.16,014.14 கோடி குறைந்து ரூ.6,13,366.40 கோடியாக உள்ளது.
மேலும் படிக்க | புதிய வகை கொரோனா - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்
இது தவிர, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மூலதனம் ரூ.11,877.18 கோடி குறைந்து ரூ.6,15,557.67 கோடியாக உள்ளது. மறுபுறம், இன்ஃபோசிஸின் சந்தை மூலதனம் ரூ.10,436.04 கோடி குறைந்து ரூ.6,30,181.15 கோடியாகவும், எச்டிஎஃப்சியின் மதிப்பு ரூ.8,181.86 கோடி குறைந்து ரூ.4,78,278.62 கோடியாகவும் உள்ளது.
கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள, சீனாவின் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிட் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் பகுதிகளில் ஜனவரி மாதத்தில் கொரோனாவின் புதிய அலை உச்சம் பெற வாய்ப்புள்ளது என்ற செய்தியால், உலக அளவிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
மேலும் படிக்க | கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை சிதைத்த பனிப்புயல்! அமெரிக்காவில் 17 பேர் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ