அந்நிய செலாவணி கையிருப்பில், இந்தியா உலகில் 5வது இடத்தை பிடித்து சாதனை
கொரோனா தொற்றுநோய் நெருக்க்டி நிலையிலும், நரேந்திர மோடி (PM Narendra Modi) )தலைமையிலான மத்திய அரசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு என்னவென்றால், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 6.842 பில்லியன் டாலர் அதிகரித்து முதன்முறையாக 600 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது.
புதுடெல்லி: கொரோனா தொற்றுநோய் நெருக்க்டி நிலையிலும், நரேந்திர மோடி (PM Narendra Modi) )தலைமையிலான மத்திய அரசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு என்னவென்றால், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 6.842 பில்லியன் டாலர் அதிகரித்து முதன்முறையாக 600 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவு
அந்நிய செலாவணி அதிகரித்தற்கு காரணம் வெளிநாட்டு நாணய சொத்துக்களின் வளர்ச்சி தான் என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. முன்னதாக, 2021 மே 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி இருப்பு 5.271 பில்லியன் டாலர் அதிகரித்து 598.165 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது.
அந்நிய செலாவணி கையிருப்பில் இந்தியா உலகின் 5 வது பெரிய நாடாக சாதனை
அந்நிய செலாவணி இருப்பு அடிப்படையில் இந்த புதிய சாதனையுடன் இந்தியா (India) உலகின் ஐந்தாவது பெரிய நாடாக மாறியுள்ளது. இதில் இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அமெரிக்காவின் அந்நிய செலாவணி இருப்பு 142 பில்லியன் டாலர் மட்டுமே, இது பட்டியலில் 21 வது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன. இப்போது இந்த பட்டியலில் சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ALSO READ | G-7 Summit: இந்தியாவுக்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் நன்றி: பிரதமர் மோடி
தங்க இருப்பு ஒரு மில்லியன் டாலர் வரை குறைந்துள்ளது
வெளிநாட்டு நாணய சொத்துக்கள் டாலர்களில் குறிப்பிடப்படுகின்றன. டாலருக்கு கூடுதலாக யூரோ, பவுண்டு மற்றும் யென் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் இதில் அடங்கும். மதிப்பாய்வு செய்யப்பட்ட வாரத்தில் தங்க இருப்பு 502 மில்லியன் டாலர் குறைந்து 37604 பில்லியன் டாலராக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில், (IMF) ஸ்பெஷல் ட்ராயிங் ரைட் (SDR) 1 மில்லியன் டாலர் குறைந்து 1.513 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதியத்த்தில், நாட்டின் இருப்பு 16 மில்லியன் டாலர் குறைந்து 5 பில்லியன் டாலராக உள்ளது.
ALSO READ: G7 Summit: ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR