புதுடில்லி: சீனா, வியட்நாம் மற்றும் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகையான எஃகு பொருட்களுக்கு இந்திய அரசு பொருள் குவிப்பு வரி என்னும் Anti-dumping duty -ஐ விதித்துள்ளது. இந்த வரி ஐந்து ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து பொருட்கள் பெருமளவில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டுத் தொழிலில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பு (WTO) விதித்திருக்கும் விதிமுறைகளின் கீழ் Anti-dumping duty விதிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இந்த வரி விதிப்பு அறிவிப்பின் கீழ் பொருள் குவிப்பு வரி எனப்படும் Anti-dumping duty, விதிக்கப்பட்ட நாளிலிருந்து, அதாவது 2019 அக்டோபர் 15 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு (ரத்து செய்யப்படவோ, திருத்தப்படவோ அல்லது முன்னதாக மீறப்படாத நிலையில்) அமலில் இருக்கும்" என்று வருவாய் துறை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


Read Also | ரசிகர்களின் எண்ணிக்கையில் சாதனை 2020 ICC மகளிர் T20 உலகக்கோப்பைத் தொடர்


இறக்குமதியால் உள்நாட்டுத் தொழிலுக்கு ஏற்படும் சேதத்தை சரி செய்வதற்காக, பொருள் குவிப்பின் மார்ஜின் மற்றும் இந்த பொருட்களின் குவிப்பால் உள்நாட்டு சேதத்தின் மார்ஜினுக்கு ஏற்றவாது வரி விதிக்கலாம் என்று அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.


இந்த நாடுகளிலிருந்து மலிவான விலையில் சில விதமான எஃகு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நட்டமடைகிறார்கள்.


உள்நாட்டு தொழிலை காக்கும் நோக்கில், 'அலுமினியம் மற்றும் துத்தநாகம்  பூசப்பட்ட தட்டையான மற்றும் உருட்டப்பட்ட எஃகு, தயாரிப்பு'   பொருட்களின் இறக்குமதிக்கு டன்னுக்கு 13.07 அமெரிக்க டாலர் முதல் 173.1 அமெரிக்க டாலர் வரையிலான பொருள் குவிப்பு வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனா, கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இதுபோன்ற பலவிதமான எஃகுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.


Read Also | ஜூலை 7 முதல் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் வரவேற்கத் தயாராகும் Dubai


பொருள் குவிப்பு வரியை விதிப்பதற்கு உலக வர்த்தக அமைப்பு (WTO) சட்டங்கள் அனுமதித்துள்ளது. நியாயமான வர்த்தக நடைமுறைகளை உறுதி செய்வதையும் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் செயலால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.