புதுடெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவுடனான வர்த்தகத்தில் ரஷ்யாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிரது. இந்தியாவுக்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் ஒரு செங்குத்தான அதிகரிப்பு உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட பத்து மடங்கு இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா அதிகரித்துள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் இப்போது இந்தியாவின் இறக்குமதி எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட பத்து சதவீதத்தை பூர்த்தி செய்கிறது என்பது இரு நாடுகளின் வர்த்தக ரீதியிலான உறவுக்கு குறிப்பிடத்தக்க உதாரணம் ஆகும். இந்த நிலையில், ரஷ்யாவுடனான வர்த்தக தீர்வை இந்தியா விரைவில் ரூபாயில் தொடங்கும் முயற்சிக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒத்துழைப்பு அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வர்த்தக செயல்முறையை எளிதாக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒப்புக்கொண்டதால், ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா விரைவில் தொடங்கும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ) தலைவர் சக்திவேல் புதன்கிழமை (செப்டம்பர் 14) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



சர்வதேச வர்த்தகத்திற்கான கொடுப்பனவுகளை ரூபாயில், குறிப்பாக இந்தியாவின் ஏற்றுமதிக்கான கட்டணங்களை வழங்குவதற்கான வழிமுறையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு வர்த்தக அமைப்பின் தலைவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. 


“இந்திய ரூபாயில் ஏற்றுமதி-இறக்குமதியை அனுமதிக்கும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் ஏற்பட்டுள்ளது. நாடு கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்வதையும், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட நாடுகளுக்கு நமது ஏற்றுமதியை அதிகரிக்க இது உதவும்” என்று வர்த்தக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.  


மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!


இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது, அதே நேரத்தில் இறக்குமதி தொடர்ந்து அதிகரிதது வருகிறது, குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்திருப்பதன் காரணமாக இந்தியா அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.


இந்தியாவின்  எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட பத்து சதவீதத்தை, ரஷ்ய கச்சா எண்ணெய் பூர்த்தி செய்கிறது. இந்தப் பின்னணியில், ரூபாயில் வர்த்தகம் என்ற புதிய முயற்சி வெற்றியடைந்தால், இந்திய நாணயமான ரூபாயை சர்வதேசமயமாக்குவதில்  வெற்றி கிடைக்கும் என்று  பரவலாக நம்பப்படுகிறது.


Hong Kong Dollar, Renminbi மற்றும் Arab Emirates Dirham போன்ற கரன்சிகளில் எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், உலகளாவிய நாணயச் சந்தையில் ஒரு சுவாரஸ்யமான வளர்ச்சி நடைபெற்று வருவதாக எஸ்பிஐ ஆராய்ச்சி சமீபத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


"டாலரை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளது, மாறிவரும் உலக வர்த்தகத்தில், இந்தியா ரூபாயை நம்பகமான, மதச்சார்பற்ற மாற்றாக உயர்த்துவதற்கான நேரம் இதுதான் என்று நம்பலாம்" என எஸ்பிஐ ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | தமிழுக்கு இந்தி எதிரியா... என்ன சொல்கிறார் அமித் ஷா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ