இந்தியன் ரயிலில் மூத்த குடிமக்களுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படுகிறது: உலக மூத்த குடிமக்கள் தினம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் மூத்த குடிமக்கள் வீட்டின் கூரை என்று அழைக்கப்படுகிறார்கள். சமுதாயத்துடன், அரசும் அவர்களைக் கவனித்துக் கொள்கிறது. ரயில்வேயும் இதில் பின்தங்கவில்லை. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே என்னென்ன வசதிகளை வழங்குகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்தியன் ரயில்வே விதிகளின்படி, 60 வயது ஆண் மற்றும் 58 வயது பெண் குடிமக்கள் (Women Senior Citizen) மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள். முன்னதாக, ரயில்வே மூத்த குடிமக்களுக்கு (Indian Railways Senior Citizen Concession) ஒவ்வொரு வகுப்பிற்கும் அதற்கேற்ப கட்டண சலுகையை அளித்து வந்தது. அதேபோல் துரந்தோ, சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களிலும் இந்த தள்ளுபடி வழங்கப்பட்டது இருந்தது. இந்தச் சலுகையில் பெண் மூதத குடிமக்களுக்கு 50% ஆகவும், ஆண் மூதத குடிமக்களுக்கு 40% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், நாடு முழுவதும் 2019 ஆம் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய்களின் (Covid-19) காரணமாக இந்த சலுகை ரத்து செய்தது மத்திய அரசு. அதன்படி தற்போது மீண்டும் மூத்த குடிமக்களுக்கு எப்போது இந்த கட்டண சலுகை அளிக்கப்படும் என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


மேலும் படிக்க | மிஷன் 3000 மெட்ரிக் டன்... அலுமினியம் ரயில் பெட்டிகள்... ரயில்வேயின் அசத்தல் திட்டம்!


இந்திய ரயில்வேயில் இரண்டு வகையான பெட்டிகள் உள்ளன. முதலாவது ஒதுக்கப்பட்டது மற்றும் இரண்டாவது இருக்கை ஒதுக்கீடு இல்லாதது. ஒரு மூத்த குடிமகன் ரயில்வேயில் (Indian Railways) டிக்கெட் முன்பதிவு செய்யும் போதெல்லாம், முன்னுரிமை அடிப்படையில் அவருக்கு லோயர் பெர்த் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஒரு பெண்ணின் வயது 45 வயதுக்கு மேல் இருந்தால், ரயில்வேயின் கம்ப்யூட்டர் சிஸ்டம் தானாகவே லோயர் பெர்த்தை வழங்குகிறது. ஆனால் இந்த முன்னுரிமை பெர்த் அவைலவிலிட்டி அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்படுகிறது..


மூத்த குடிமக்களுக்காக இருக்கைகள் / பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
ரயில் பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில், சில இருக்கைகள் அதாவது பெர்த்கள் (Lower Birth) மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஸ்லீப்பர் கோச்சிலும் சுமார் 6 கீழ் பெர்த்கள் மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த இருக்கைகளில் மட்டுமே இடமளிக்கப்படுகிறது. சாதாரண மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட ராஜ்தானி, துரந்தோ மற்றும் ஃபுல் ஏசி ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான இருக்கைகள் / பெர்த்கள் அதிகம்.


இது தவிர, மும்பை உள்ளூர் (Mumbai Local Trains) ரயில்களில் மூத்த குடிமக்களுக்காகவும் சில இருக்கைகள் / பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூத்த பெண் குடிமக்களுக்கும் இதில் இடமளிக்கப்பட்டுள்ளது. வசதிகள் பற்றி பேசுகையில், மூத்த குடிமக்களுக்கு முக்கிய ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன.


உலக மூத்த குடிமக்கள் தினம்
ஒரு வீட்டில் தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். எதிர்கால சந்ததிகளின் வழிக்காட்டிகளாக பார்க்கப்படுபவர்கள் மூத்த குடிமக்கள். அவர்களின் பங்களிப்பு உலகத்திற்கு எவ்வளவும் முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி உலக மூத்த குடிமக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.


மேலும் படிக்க | Indian Railways: உங்களுக்கு தெரியுமா... ரயில் ஓட எத்தனை இன்ஜின் ஆயில் தேவை...!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ