காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்
Railways New Rules Updates : ரயில் டிக்கெட் விதிமுறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய ரயில்வே, காத்திருப்பு டிக்கெட் ரத்து செய்யப்படும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறை நாட்டின் மிகப்பெரிய பொதுபோக்குவரத்து துறையாக இருக்கிறது. சாமானியர்கள் இந்தியா முழுவதும் பெரிதும் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்தும் நிலையில், அதில் பயணம் செய்யும் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது ரயில்வே துறை. ரயில் பயணிகளுக்கு இருக்கும் பொதுவான சிக்கல் என்னவென்றால், ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது பெரும்பாலான நேரங்களில் வெயிடிங் லிஸ்டில் இருக்கும்.
அப்போது, பயணச்சீட்டு ரத்து என்ற பெயரில், Convenience fee என்ற பெயரில் பயணிகளிடம் இருந்து பெரும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என ரயில் பயணிகள் விரும்பிய நிலையில், காத்திருப்பு மற்றும் ஆர்ஏசி டிக்கெட் விதிகளில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, இப்போது பயணிகள் காத்திருப்பு அல்லது RAC டிக்கெட்டுகளை ரத்து செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் படிக்க | SMS மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் எப்படி சரிபார்க்கலாம்
ரயில்வே விதிகளை மாற்றியது
ரயில் விதிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதாவது, நீங்கள் காத்திருப்பு டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது அது ரத்து செய்யப்பட்டாலோ, உங்களுக்கு Convenience fee என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இனி டிக்கெட்டை ரத்து செய்ய பயணிகளிடம் இருந்து ரூ.60 வசூலிக்கப்படும்.
விதிகள் ஏன் மாறியது?
ஜார்க்கண்ட் சமூக ஆர்வலர் சுனில் குமார் கண்டேல்வால், காத்திருப்பு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு ரயில்வேயால் பெரும் தொகை வசூலிக்கப்படுவதாக புகார் அளித்தார். பயணச்சீட்டு ரத்து கட்டணம் என்ற பெயரில் மட்டும் ரயில்வே பெரும் தொகையை சம்பாதிப்பதாக புகார் கூறினார். ஒரு பயணி ரூ.190க்கு டிக்கெட் வாங்கியதை உதாரணத்துடன் விளக்கினார். அந்த டிக்கெட் காத்திருப்பு டிக்கெட்டாக இருந்தது, அது உறுதி செய்யப்படாமல் ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டது. ரெயில்வே டிக்கெட்டை ரத்து செய்த பிறகு அவருக்கு வெறும் ரூ.95 மட்டுமே கிடைத்தது, மீதமுள்ள தொகை Convenience fee என்ற பெயரில் வசூலிக்கப்பட்டது. இந்தப் புகாருக்குப் பிறகு, ஐஆர்சிடிசியும் ரயில்வேயும் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டன. இதுபோன்ற டிக்கெட்டுகளுக்கு ரயில்வே நிர்ணயித்த ஒரு பயணிக்கு 60 ரூபாய் ரத்து கட்டணமாக மட்டுமே வசூலிக்கப்படும் என ரயில்வே முடிவு செய்துள்ளது.
தண்ணீர் பாட்டில் விதி மாற்றம்
சமீபத்தில் வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் தொடர்பான விதிகளை ரயில்வே மாற்றியமைத்துள்ளது. 1 லிட்டருக்கு பதிலாக 500 மில்லி பாட்டில்களை பயணிகளுக்கு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. பயணிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப கூடுதல் 500 மில்லி பாட்டில் இலவசமாக வழங்கப்படும். தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தில் ரயில்வே இதை செய்துள்ளது.
மேலும் படிக்க | ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ