Indian Railways Plans to roll out Vande Metro: குறுகிய தூர பிரீமியம் பயணத்திற்கான இந்திய ரயில்வேயின் புதிய ரயிலான வந்தே மெட்ரோ, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரத் தயாராக உள்ளது. வந்தே மெட்ரோ திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பட்ஜெட் 2023க்குப் பிந்தைய ரயில்வேயின் விளக்கத்தின் போது முதலில் அறிவித்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து ஈர்க்கப்பட்ட வந்தே மெட்ரோ, 130 கிமீ வேகத்தில் குறைந்த தூரத்திற்கான அதி வேக சொகுசு பயணத்தை கொடுக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வந்தே மெட்ரோ ரயில்கள்


திட்டத்தைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்ட ICF GM BG மல்லையா, வந்தே மெட்ரோ ரயில்கள் 300 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்று கூறினார் “வந்தே மெட்ரோ மெயின்லைன் மின்சார ரயில்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே இது 250 முதல் 300 கிலோமீட்டர் வரையிலான இந்த குறுகிய தடங்களுக்கு இந்த மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்படும்,” என்று மல்லையா கூறினார். முதல் வந்தே மெட்ரோ ரயிலின் தயாரிப்பு தொடங்கியுள்ளது, எனக் கூறிய ICF GM, 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்  இந்த ரயில் தயாரிப்பு நிறைவடையும் என்றார்


வந்தே மெட்ரோ ரயில் அம்சங்கள்


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் அனைத்து முக்கிய அம்சங்களையும் வந்தே மெட்ரோ கொண்டிருக்கும். “வந்தே பாரத் நாற்காலி காரில் ஒரே வித்தியாசம், பயணிகள் நின்று பயணம் செய்ய வாய்ப்பு இல்லை. இந்த ரயிலில் நிற்கும் பயணிகளுக்கு இடம் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 100 பயணிகளை இருக்கைகளிலும், 200 ஸ்டாண்டிலும் ஏற்றிச் செல்லலாம்,” என்றார்.


வந்தே மெட்ரோ ரயில்களின் சில முக்கிய அம்சங்கள்:


1. ரயிலின் வேகம் மணிக்கு 130 கிமீ


2. ரயில் பெட்டிகள் அனைத்தும் முழுவதுமாக குளிரூட்டப்பட்டவை


3. முழுமையாக சீல் செய்யப்பட்ட பாதைகள்


4. குறைந்த எடை கொண்ட ரயில் உடல் பகுதி & தற்கால வடிவமைப்புடன் கூடிய குறைந்த எடை குஷன் இருக்கைகள்


5. 4 செட் பரந்த தானியங்கி கதவு


6. ஏரோடைனமிகலாக வடிவமைக்கப்பட்ட ஓட்டுநர் பகுதி


7. CCTV, கேமராக்கள், LCD காட்சிகளுடன் கூடிய PIS அமைப்பு


8. பரவலான விளக்குகள், வழி காட்டி காட்சிகள்


9. தானியங்கி தீ கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பு


10. ரோலர் பிளைண்ட்களுடன் கூடிய பரந்த பனோரமிக் சீல் செய்யப்பட்ட ஜன்னல்கள்


11. அவசர நிலையில் தொடர்பு கொள்ளும் வசதி


12. பைல் சார்ஜிங் சாக்கெட்டுகள்


13. வெற்றிட வெளியேற்ற அமைப்புடன் கூடிய மட்டு கழிவறை அமைப்பு


14, இலகு ரக அலுமினிய சாமான்கள் ரேக்


15. கவாச் ரயில் மோதல் தடுப்பு அமைப்பு


16. டிரைவிங்  பெட்டியில் கழிப்பறை


மேலும் படிக்க | நவீன வசதிகளுடன் ஜொலிக்கும் வந்தேபாரத் ரயில்களில் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ