Indian Railways: அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். சில விஷயங்களை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பிரச்சனைகளுக்கு ஆளாகலாம். ரயில் பயணத்தின் போது நீங்கள் செய்யும் சிறிய தவறும் கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும். நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரயில்வே ஒரு புதிய கொள்கையைப் பற்றி அறிவித்துள்ளது. இது பயணிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட போர்டிங் ஸ்டேஷனை, அதாவது தாங்கள் ஏற வேண்டிய ரயில் நிலையத்தை விடுத்து வேறு ரயில் நிலையத்தில் ஏறுவதையும், அப்படி ஏறிவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையைக் கேட்பதையும் தடுக்கும்.


கடந்த காலத்தில், ரயில்வே டிக்கெட் பரிசோதகர்களிடம் (Railway Ticket Examiners), ஒரு குறிப்பிட்ட ரயிலுக்கான அனைத்து முன்பதிவுகளின் அச்சிட்டப்பட்ட பட்டியல் கொடுக்கப்படும். இது TTE க்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட போர்டிங் ஸ்டேஷனைத் தவறவிட்ட பயணிகளுக்காக காத்திருக்க அனுமதித்தது. ஆனால், இந்த கொள்கை இனி நடைமுறையில் இல்லை.


மேலும் படிக்க | Fixed Deposit: அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும் அற்புதமான FD அம்சங்கள்


TTE -கள் இப்போது டேப்லெட்டுகளைப் போன்ற கையடக்க டெர்மினல்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த டெர்மினல்கள் சமீபத்திய முன்பதிவு தகவலுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட நிலையத்திற்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள் (Passengers) அந்த நிலையத்தில் ரயிலில் ஏறவில்லை என்றால், அடுத்த ஸ்டேஷனில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு அந்த சீட் ஒதுக்கப்படலாம்.


இந்த புதிய கொள்கையின் அர்த்தம் என்னவென்றால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட போர்டிங் ஸ்டேஷனைத் தவிர வேறு நிலையத்தில் ரயிலில் ஏற விரும்பும் பயணிகள் முதலில் தங்கள் போர்டிங் தகவலை மாற்ற வேண்டும். இதைச் செய்ய, பயணிகள் இந்திய ரயில்வே முன்பதிவு அலுவலகத்தைத் (Indian Railways Reservation Office) தொடர்புகொள்ளலாம் அல்லது IRCTC இணையதளம் (IRCTC Website) அல்லது செயலியைப் (IRCTC App) பயன்படுத்தலாம்.


புதிய கொள்கையானது ரயில் இயக்கங்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் அடுத்த படியாக பார்க்கப்படுகின்றது. காத்திருப்புப் பட்டியலில் (Waiting List) உள்ள பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதற்கான நியாயமான வாய்ப்பு இருப்பதையும் இது உறுதி செய்கிறது.


கூடுதல் தகவல்


மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை


மூத்த குடிமக்களுக்கு, 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்திய ரயில்வே லோயர் பெர்த் இருக்கைகளை தருகிறது. ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 லோயர் பெர்த்கள், ஒவ்வொரு மூன்றாவது ஏசி கோச்சில் 4-5 லோயர் பெர்த்கள், ஒவ்வொரு இரண்டாவது ஏசி பெட்டியிலும் 3-4 லோயர் பெர்த்கள் ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் டிக்கெட்களை புக் செய்யும் போது லோயர் பெர்த் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்காமல் இருந்தாலும் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். மறுபுறம், மூத்த குடிமக்களுக்கு அல்லது கர்ப்பிணி பெண்ணுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு கொடுக்கப்பட்டால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது TT அவர்களுக்கு லோயர் பெர்த் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடு செய்ய முடியும்.


இந்திய ரயில்வே அபராத விதிகள்


இந்திய ரயில்வே பயணிகளுக்கு பல விதிகளை கொண்டு வருகிறது. இந்த விதிகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ரயில்வே விதிகளின்படி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அதிகபட்சமாக ரூ.1000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதம் 250 ரூபாய் வரை இருக்கலாம்.  அதே போல ஒரு பயணி வேறு ஏதேனும் பெட்டியில் டிக்கெட் எடுத்து பயணம் செய்தால், அதாவது ஒரு பயணி ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ஏசி கோச்சில் பயணம் செய்கிறார் என்றால் டிக்கெட்டுகளுக்கு இடையேயான வித்தியாச தொகை வசூலிக்கப்படும். இதிலும் TTE மூலம் கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம்.


மேலும் படிக்க | Budget 2024 Date and Time: இடைக்கால பட்ஜெட் தாக்கல், முழு அட்டவணை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ