இந்திய ரயில்வே 2030ம் ஆண்டிற்குள் சோலார் மயமாகும்: Piyush Goyal
இந்திய ரயில்வே 2030ம் ஆண்டிற்குள் சோலார் மயமாகும் என மத்திய ரயில்வே அன்மைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இந்திய ரயில்வே 2030ம் ஆண்டிற்குள் சோலார் மயமாகும் என மத்திய ரயில்வே அன்மைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 31 ம் தேதி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ”இந்திய ரயில்வே இதுவரை 960 ரயில் நிலையங்களை சோலார் மயமாக்கியுள்ளது. மேலும் 550 ரயில்வே நிலையங்களை சோலார் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2030 க்குள் கார்பன் உமிழ்வே இல்லாத ரயில்வேயாக மாறி விடும்” என்று கூறினார்.
சோலார் மயமாக்கப்பட்ட சில நிலையங்களில் வாரணாசி, புது தில்லி, பழைய தில்லி, ஜெய்ப்பூர், செகந்திராபாத், கொல்கத்தா, குவஹாத்தி, ஹைதராபாத் மற்றும் ஹவுரா ஆகியவை அடங்கும்.
2030 க்குள் காலியாக உள்ள நிலத்தைப் பயன்படுத்தி 20 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய ஆலைகளை நிறுவுவதற்கான மெகா திட்டமும் இந்திய ரயில்வே வசம் உள்ளது.
"சுமார் 51,000 ஹெக்டேர் காலி நிலம் இந்திய ரயில்வே வசம் உள்ளது, இப்போது ரயில்வேயின் காலியாக உள்ள ஆக்கிரமிக்கப்படாத நிலத்தில் சூரிய மின் நிலையங்களை நிறுவ டெவலப்பர்களுக்கு அனைத்து உதவிகளை வழங்க அமைச்சகம் தயாராக உள்ளது" என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ALSO READ | Unlock 4: விரைவில் 100 ரயில்கள் தொடங்கும், ரயில்வே இந்த ஒப்புதலுக்காக காத்திருப்பு