FD முதலீட்டிலும் ரிஸ்க் உண்டு... எச்சரிக்கையாக இருங்க மக்களே..!!
பொதுவாக வங்கிகளின் நிலையான வைப்புகளில் (வங்கி FDகள்) டெபாசிட் செய்யப்படும் பணம் முற்றிலும் பாதுகாப்பானது என்று நாம் நம்புகிறோம். இதில் சந்தை ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை. ஆனால், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் பாதுகாப்பானது தானா..!
நிலையான வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதிலும் (FDs) ஆபத்து உள்ளது. பொதுவாக வங்கிகளின் நிலையான வைப்புகளில் (வங்கி FD முதலீடுகள்) டெபாசிட் செய்யப்படும் பணம் முற்றிலும் பாதுகாப்பானது என்று நாம் நம்புகிறோம். தவிர, அதில் நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் உள்ளது. இதில் சந்தை ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை. ஆனால், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தில் உண்மையில் ஆபத்து இல்லாதது தானே என்கிற கேள்வி பலர் மனதில் உள்ளது?
வங்கிகளில் முதலீடு செய்யும் பணமெல்லாம் பாதுகாப்பானது தான் என கூற இயலாது. வங்கி FDகளிலும் சில அபாயங்கள் உள்ளன. அதை 5 புள்ளிகளில் தெரிந்து கொள்வோம்....
100% தொகை பாதுகாப்பானது அல்ல
பொதுவாக, சந்தையில் உள்ள பிற வகை முதலீடுகளை விட வங்கி FD வைப்பு பாதுகாப்பானது. ஆனால், வங்கி கடனை செலுத்த முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டாலோ அல்லது செலுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ, டெபாசிட் செய்பவரின் 5 லட்சம் வரையிலான டெபாசிட் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். இதே விதி நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும். டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) வங்கி டெபாசிட்டுகளுக்கு ரூ. 5,00,000 வரை மட்டுமே காப்பீட்டு உத்தரவாதத்தை வழங்குகிறது.
பணவீக்கம் காரணமாக குறையும் இலாபம்
வங்கி FDக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், பணவீக்கத்தை ஒப்பிட்டு பார்த்தால், வங்கி டெபாசிட்களின் வருமானம் தற்போதைய காலத்தில் மிகக் குறைவாக இருக்கும். பணவீக்க விகிதம் 6 சதவீதமாக இருக்கும் நிலையில், FD மீதான வட்டி சுமார் 5 சதவீதமாக இருந்தால், உங்கள் வருமானம் கிட்டத்தட்ட பூஜ்யமாக இருக்கும்.
கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை
வங்கி FD முதலீட்டில் பணப்புழக்கத்தில் சிக்கல் உள்ளது. தேவைப்பட்டால் FD கணக்கை மூடலாம் என்றாலும், முதிர்ச்சி காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க அபராதம் செலுத்தப்பட வேண்டும். FD மீதான முதிர்வுக்கு முந்தைய அபராதம் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.
மறு முதலீட்டில் லாபமோ நஷ்டமோ இல்லாத நிலை
டெபாசிட்கள் மீதான வட்டி விகிதங்கள் குறையும் பட்சத்தில், நீங்கள் FD கணக்கை மறு முதலீடு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்தால், அந்தத் தொகை தானாகவே FD கணக்கிற்கு செல்லும். ஆனால், சந்தையில் வட்டி விகிதங்கள் மேலும் குறைந்தால், உங்கள் FD கணக்கிற்கு பழைய விகிதத்தில் வட்டி கிடைக்காது, ஆனால் அது குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் மட்டுமே கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முன்பை விட குறைவான வருமானத்தைப் பெறுவீர்கள்.
1 நாள் வித்தியாசத்தில் இழப்பு
பொதுவாக, வைப்பாளர்கள் 6 மாதங்கள், 1 வருடம், 2 ஆண்டுகள் போன்ற சுற்று எண்ணிக்கை காலத்திற்கான FD செய்கிறார்கள். சில வங்கிகளில், FD மீதான வட்டி விகிதம் இந்த ரவுண்ட் ஃபிகர், முதலீட்டு காலத்தை பொறுத்து மாறுபடும், இது 1 அல்லது கொஞ்சம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். எனவே, ஒரு எஃப்டியைத் திறப்பதற்கு முன், எப்டி காலம் மற்றும் அதற்கான வட்டியை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள்.