இந்திய ரயில்வே பிரிமியம் ரயில்களில் நல்ல தரமான உணவை வழங்குகிறது. ஆனால், மெயில் மற்றும் விரைவு ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகள் திருப்தியடையவில்லை. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் Pantry Car-ல் குறைந்த எண்ணிக்கையிலான உணவுகள் கிடைக்கும். கொரோனா காலத்தில் இவை தற்காகலிமாக கொடுகப்படவில்லை. ஆனால், இப்போது மீண்டும் அவற்றை ரயில்வே பயணிகளுக்கு வழங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது. இப்போது பயணிகள் சமோசா, ரொட்டி பக்கோரா, வெங்காய பஜ்ஜி, வடை, உப்மா, மசாலா தோசை உட்பட சுமார் 70 உணவுகளை வாங்கி சாப்பிடலாம். ரயிலின் பேண்ட்ரி காரில் இவை தயாரிக்கப்படும். IRCTC இந்த உணவுகளின் மெனு மற்றும் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IRCTC: ஹோலி பண்டிகைக்கு ரயிலில் சொந்த ஊருக்கு போறீங்களா? டிக்கெட் கன்பார்ம்


இப்போது வெளியிடப்பட்டிருக்கும் உணவு பட்டியலில் வேகவைத்த காய்கறிகள், பாலுடன் ஓட்ஸ், பாலுடன் கார்ன் ஃப்ளேக்ஸ், ஆம்லெட், ராகி லட்டு, ராகி கச்சோரி, ராகி மசாலா தோசை, ராகி உப்மா, ராகி உத்தாப்பம், ராகி பராத்தா, ரொட்டி வெண்ணெய், தோக்லா போஹா முதல் பர்கர் வரை கிடைக்கும். கொரோனா வைரஸ் பரவலையொட்டி நிறுத்தப்பட்டிருந்த உணவு சேவை இப்போது மீண்டும் தொடங்க ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. IRCTC பட்டியலின்படி, 70 உணவுகள் கொண்ட மெனுவை தயார் செய்துள்ளார். இதில், சைவம், அசைவம், தினை உணவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணிகள் பிராந்திய உணவு வகைகளையும் பெறுவார்கள்.


விலை பட்டியல் இங்கே


சப்பாத்தி ரூ.10, கச்சோரி ரூ.10, பிளேட் இட்லி ரூ.20, சட்னி/சாம்பார் கொண்ட இட்லி ரூ.20, பிரெட் வெண்ணெய்/பட்டர் டோஸ்ட் (2 துண்டுகள்) ரூ.20, ஆலு போண்டா/கொழுக்கட்டா (2 பீஸ்) – ரூ.20, சமோசா (2) பிஸ் –ரூ 20, மெது வடை (2 துண்டுகள்) ரூ 20, சூடான/குளிர்ந்த பால்–ரூ 20.


மசாலா/தால் வடை (2 துண்டுகள்) ரூ.30, ரவா/கோதுமை/ஓட்ஸ்/சேமியா உப்மா ரூ.30, உத்தபம் ரூ.30, தஹி வடை (2 துண்டுகள்) ரூ.30, ரொட்டி பக்கோரா ரூ.30, வெங்காயம்/உருளைக்கிழங்கு/பிரிஞ்சி /பாஜி ரூ.30, தோக்லா ரூ.30, போஹா ரூ.30, தக்காளி/வெஜ்/சிக்கன் சூப் ரூ.30, கட்டா சப்ஜி ரூ.30, மசாலா தோசை ரூ.30.


ராஜ்மா-சோல் அரிசி 50 ரூபாய்க்கு கிடைக்கும். இதேபோல், தாஹி-அரிசி ரூ.50, பனீர் பகோரா (2 துண்டுகள்) ரூ.50, வெஜ் பர்கர் ரூ.50, ராஜ்மா/சோல் அரிசி ரூ.50, சீஸ் சாண்ட்விச் (2 துண்டுகள்) ரூ.50, வெஜ் நூடுல்ஸ் ரூ.50, பாவ் பாஜி (2 பாவ்) ரூ. 50 கிடைகும். 


மேலும் படிக்க | 8th Pay Commission: உதியக்குழு என்றால் என்ன? ஊழியர்களின் சம்பளம் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றது?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ