இந்திய ரயில்வே தனது பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது, அதில் ஒன்றுதான் வாட்ஸ் ஆப் மூலம் உணவு டெலிவரியும்.  ரயிலில் பயணம் செய்பவர்கள் வழியில் ருசியான மற்றும் தங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டால் இப்போது நீங்கள் வாட்ஸ் அப் மூலம் உணவை ஆர்டர் செய்துகொள்ளலாம்.  இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட www.catering.irctc.co.in என்ற இணையதளம் மற்றும் அதன் இ-கேட்டரிங் செயலியான Food on Track மூலம் பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்திய ரயில்வே இப்போது தனது பயணிகளை வாட்ஸ்அப் மூலம் ரயில்களில் தங்கள் உணவை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.  +91 8750001323 என்ற எண்ணை தொடர்புகொண்டு ரயில்வே அமைச்சகம் வழங்கும் இ-கேட்டரிங் சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வங்கிகளில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டும்... அபராதம் எவ்வளவு? - முழு விவரம்


வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் மூலம் இ-கேட்டரிங் சேவைகளை இரண்டு நிலைகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.  முதற்கட்டமாக, www.ecatering.irctc.co.in என்ற இணைப்பைக் கிளிக் செய்த பிறகு வாட்ஸ்அப் எண் வாடிக்கையாளர் முன்பதிவு செய்யும் மின்-டிக்கெட்டுக்கு ஒரு செய்தியை அனுப்பும்.  இந்த ஆப்ஷனை பயன்படுத்தி பயணிகள் தங்களுக்கு பிடித்தமான உணவை ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் இணையதளம் மூலம் ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவகங்களில் இருந்து செயலியை டவுன்லோடு செய்து அதில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  அடுத்ததாக பயணிகளுக்கு வாட்ஸ் அப் எண் வாயிலாக இ-கேட்டரிங் சேவைகளை வழங்குகிறது.  



ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் செயலி மூலம் இ-கேட்டரிங் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 50000 உணவுகள் வழங்கப்படுகின்றன என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.  www.ecatering.irctc.co.in என்கிற முகவரிக்கு சென்று இ-கேட்டரிங் சேவைகளைத் தேர்வுசெய்ய பிசினஸ் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வாடிக்கையாளருக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.  ஐஆர்சிடிசி-ன் இ-கேட்டரிங் இணையதளம் மூலம் நேரடியாக ரயில் நிலையங்களில் கிடைக்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவகங்களில் இருந்து தங்களுக்கு விருப்பமான உணவை முன்பதிவு செய்யலாம்.


மேலும் படிக்க | நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்டை நிறைக்கும் புதிய வரி விதிப்பு முறை - நிர்மலா சீதாராமன் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ