புதுடெல்லி: மேற்கு ஆசிய நாடுகளுக்கு இறைச்சி, கோழி, பால் பொருட்கள், பாஸ்மதி அரிசி, பதப்படுத்தப்பட்ட கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தொடர்பாக இந்திய அரசிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உணவுத் துறை  ஆதரவைக் கோரியுள்ளது. தங்கள் நாட்டில் கோதுமை பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது என்றும், தேவைகளை பூர்த்தி செய்ய ஆதரவளிக்க வேண்டும் என, இந்திய விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் (APEDA) UAE தொழில்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், நெறிப்படுத்தப்பட்ட சான்றிதழ் செயல்முறைகள் மற்றும் தரநிலைகளின் தரப்படுத்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தயாரிப்புகளின் உயர்தர பேக்கேஜிங், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு அரிசி மற்றும் உணவு தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய நிறுவனங்களுக்கு உதவும்.


பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள்
 
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்த போது இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. அங்கு,  இறக்குமதியாளர்களுடன் விரிவான விவாதங்களை நடத்திய மத்திய அமைச்சர் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.


மேலும் படிக்க | 40 சதவிகித ஏற்றுமதி வரி திரும்ப பெறப்படுமா? கண்ணீர் சிந்தும் வெங்காயம்


ஓமனில் இந்திய பாசுமதி அரிசிக்கு அதிக தேவை
ஓமனின் கிம்ஜி ராம்தாஸ் குழுமத்தின் பிரதிநிதி ஒருவர், இந்திய பாசுமதி அரிசிக்கு அங்கு அதிக தேவை இருப்பதாகவும், அதன் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (Minimum Export Price (MEP)) குறைப்பது இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்றும் கூறினார். அரசாங்கம் தற்போது MEP ஐ ஒரு டன்னுக்கு $1,200லிருந்து $850 ஆகக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.


வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்


(Gulf Cooperation Council (GCC)) நாடுகளில் இருந்து மற்றொரு இறக்குமதியாளர் ஹலால் சான்றிதழ் பிரச்சினையை எழுப்பினார். இந்தியாவில், சிறப்பான ஹலால் இறைச்சி சான்றிதழ் அமைப்பு (Halal meat certification system) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எலான்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஃபௌஸான் அலவி கூறுகையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement (FTA)) இறைச்சி பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவுகிறது என்று தெரிவித்தார். இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.


சோய்த்ராம்ஸ் தலைவர் (சில்லறை கொள்முதல்) கீர்த்தி மேக்னானி கூறுகையில், தயாரிப்புகளை பேக்கேஜிங் செய்வதில் கவனம் செலுத்துவது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவும். AppCorp ஹோல்டிங் தலைவர் நிதிஷ் வேத், APEDA அலுவலகத்தை இங்கு அமைப்பது உணவுத் தொழிலுக்கு உதவும் என்று பரிந்துரைத்தார்.


இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு மே மாதம் அமல்படுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2021-22ல் 72.9 பில்லியன் டாலரிலிருந்து 2022-23ல் 84.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | Rice Export Ban: அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த அரசு, ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ