Income Tax For Savings Account: இன்றைய காலகட்டத்தில் வங்கிக் கணக்கு மிகவும் முக்கியமானதாகிவிட்டது. கிட்டத்தட்ட அனைவரிடமும் ஒரு வங்கிக் கனக்கு இருக்கின்றது. குழந்தைகள், பெரியவர்கள் என ஒரே குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு வங்கிக் கணக்கு இருக்கின்றது. மாத சம்பலம், நலத்திட்டங்கள், உதவித்தொகை, ஓய்வூதியம் என எதுவாக இருந்தாலும் அனைத்திற்கும் வங்கி கணக்கு எண் அவசியமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவான பயன்பாட்டில் இருக்கும் இரண்டு வகையான வங்கிக் கணக்குகள் உள்ளன:


- ஒன்று சேமிப்புக் கணக்கு 


- மற்றொன்று நடப்புக் கணக்கு. 


பணத்தைச் சேமிக்கும் நோக்கத்தில் கணக்கைத் தொடங்குபவர்கள் பெரும்பாலும் சேமிப்புக் கணக்கு விருப்பத்தைத் தேர்வு செய்து அந்த கணக்கை தொடங்குகிறார்கள். சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு வட்டி போன்ற பல நன்மைகளை வங்கி வழங்குகிறது. சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு இல்லை என்பது பலருக்குத் தெரியாது. இதன் பொருள் என்னவென்றால் நம்மிடம் சேமிப்புக் கணக்கு இருந்தால் அற்கும் நாம் வரி செலுத்த வேண்டும்.


சேமிப்புக் கணக்கில் எப்போது வரி விதிக்கப்படுகிறது?


சேமிப்புக் கணக்கில் நாம் சேமிக்கும் தொகைக்கு வரம்பு இல்லை. சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு வரம்பை விதித்துள்ளன என்றாலும், பல வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் சேமிப்புக் கணக்கில் குறிப்பிட்ட வரம்புக்கு மேல் இருப்பு இருந்தால், கணக்கு வைத்திருப்பவர் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆகையால், சேமிப்பு கணக்கில் வருமான வரித்துறையால் குறிப்பிடப்பட்டுள்ள ஐடிஆர் வரம்பிற்குள் நீங்கள் பணத்தை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. இந்த அளவை விட அதிக பணத்தை கணக்கில் வைத்திருந்தால், வங்கியில் இருந்து பெறும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | ஒருவருக்கு Cheque கொடுக்கும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!


எவ்வளவு இருப்பு இருந்தால் வரி விதிக்கப்படுகிறது?


வருமான வரிச் சட்டத்தின்படி (Income Tax Rules), சேமிப்புக் கணக்கிலிருந்து பெறப்படும் வட்டியும் வருமானமாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் என்றும், அவருடைய சேமிப்புக் கணக்கில் அவருக்கு ரூ.10,000 வட்டி கிடைக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். இந்த வட்டியும் சேர்த்து இனி அவரது ஆண்டு வருமானம் ரூ.10,10,000 ஆக இருக்கும். வருமான வரிச் சட்டத்தின்படி இந்த வருமானம் வரிக்கு உட்பட்டது. அதாவது கணக்கு வைத்திருக்கும் நபர் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.


உங்கள் சேமிப்பு கணக்கு பற்றிய தகவல்களை வருமான வரித்துறைக்கு வழங்குவது அவசியம்


வருமான வரி விதிகளின்படி, ஒரு வணிக ஆண்டில் ஒருவர் தனது சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணத்தை வைத்திருந்தால், அது குறித்த தகவலை அவர் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், வரி ஏய்ப்பு காரணமாக வருமான வரித் துறை அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடும். அவர் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் 10 லட்சம் வருமானமாக கருதப்பட்டு, அதற்கு வரி விதிக்கப்படும்.


மேலும் படிக்க | இந்தியன் ரயில்வேயின் புதிய விதி அமல்.. பயணிகளே உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ