வருமான வரித்துறை, மாத சம்பளம் வாங்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு (ஊழியர்களுக்கு) பெரும் நிவாரணம் அளித்துள்ளது. வாடகையில்லா வீடுகள் (Rent Free Homes) தொடர்பான விதிகளில் சில மாற்றங்களைத் துறை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். மெலும் அவை செயல்படுத்தப்பட்ட பிறகு, சம்பளம் பெறும் வரி செலுத்துவோரின் வீட்டுச் சம்பளம் அதிகரிக்கும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாத ஊதியம் பெரும் அனைத்து பணியாளர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி உள்ளது. உங்கள் நிறுவனம் உங்களுக்கு ஒரு வீட்டை அல்லது தங்குமிடத்தை அளித்திருந்து, அதற்கு நீங்கள் வாடகை செலுத்திக்கொண்டு இருக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மதிப்பீடு (வேல்யுவேஷன்) தொடர்பான விதிகளில் சிபிடிடி (CBDT) நிவாரணம் வழங்கியுள்ளது. இதை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். 


CBDT அறிவிப்பை வெளியிட்டது


மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஆகஸ்ட் 19, சனிக்கிழமையன்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு முதலாளிகள் / நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் வாடகை இல்லாத வீடு அல்லது வாடகை இல்லாத தங்குமிடம் தொடர்பானது என்று செய்தி நிறுவனமான PTI இன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று CBDT அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


மாற்றங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும்


வருமான வரித்துறை வாடகையில்லா தங்குமிட வசதிகள் தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. அறிவிப்பின்படி, முதலாளிகள் / நிறுவனங்கள் மூலம் வாடகையில்லா தங்குமிட வசதி வழங்கப்பட்டுள்ள ஊழியர்கள், முன்பை விட இப்போது அதிகமாக சேமிக்க முடியும். மேலும் அவர்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் (டேக் ஹோம் சேலரி) அதிகரிக்கப் போகிறது. அதாவது, 1 செப்டம்பர் 2023 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதால், மாற்றத்தால் நன்மை அடையும் ஊழியர்களின் வீட்டுச் சம்பளம் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கும்.


இத்தகைய பணியாளர்களுக்கு நன்மைகள் கிடைக்கும்


மத்திய அரசு அல்லது மாநில அரசு ஊழியர்களைத் தவிர மற்ற ஊழியர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டு, அந்த விடுதியின் உரிமை முதலாளியிடம் இருந்தால், அவர்களுக்கான மதிப்பீடு பின்வருமாறு இருக்கும்:


மேலும் படிக்க | ரொம்ப கம்மி விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கணுமா? உடனே இதை படியுங்கள்


மாற்றப்பட்ட மதிப்பு சூத்திரம்


1) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 10%. (முன்பு இது 2001 மக்கள்தொகையின்படி 25 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 15% சம்பளத்திற்கு சமமாக இருந்தது.)


2) 2011 மக்கள்தொகையின்படி 40 லட்சத்திற்கும் குறைவான, 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 7.5% (முன்பு 2001 மக்கள்தொகையின் அடிப்படையில் 10 முதல் 25 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இது 10 சதவீதமாக இருந்தது.)


இந்த வகையில் நன்மை கிடைக்கும்


இந்த முடிவின் விளைவு என்னவென்றால், முதலாளிகள் / நிறுவனங்கள் வழங்கிய வாடகையில்லா வீடுகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு, இப்போது மாற்றப்பட்ட ஃபார்முலாவின்படி வாடகைக் கணக்கீடு செய்யப்படும். மாற்றப்பட்ட சூத்திரத்தில், மதிப்பீட்டு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இப்போது மொத்த சம்பளத்தில் இருந்து குறைவான பிடிப்பு இருக்கும். அதாவது இனி ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தில், அதாவது டேக் ஹோம் சேலரியில் அதிகரிப்பு இருக்கும்.


மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பற்றிய முக்கிய அப்டேட்: அரசின் அறிவிப்பு விரைவில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ