பணம் பாதாளம் வரை பாயும் என கூறுவார்கள். ஆனால் பணத்தை ஈட்டவும் பாதாளம் வரைதான் செல்ல வேண்டி இருக்கிறது. அனைவரும் பணத்தை சேமிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அதை எப்படி செய்வது என்று பலருக்கு குழப்பம் இருக்கும். தொகையை FD-ல் போடுவதா அல்லது RD-ல் போடுவதா என்ற யோசனை பெரும்பாலும் நம் அனைவருக்கும் உள்ளது. உங்கள் மனதிலும் இதுபோன்ற குழப்பம் இருந்தால், கவலைப்பட வேண்டாம். பணத்தை எதில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் எதில் அதிக வருமானம் பெற முடியும் என்றும் இன்று தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

FD என்றால் என்ன?


நிலையான வைப்பு, அதாவது FD, சேமிப்புக்கான ஒரு முறையாகும். இதில் பணம் ஒரு வங்கியில் அல்லது ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, நிலையான வட்டி கிடைக்கிறது. இது பொதுவாக ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு நல்ல வருமான ஆதாரமாகும். இதில், நீங்கள் வட்டியை ஒன்றாக பின்னரும் எடுத்துக்கொள்ளலாம். அல்லது ஒவ்வொரு மாதமும் எடுத்துக்கொள்ளலாம்.


RD என்றால் என்ன?


தொடர்ச்சியான வைப்புத்தொகையில் (Recurring Deposit) அதாவது RD-ல், FD-ஐப் போல, பணத்தை ஒரே நேரத்தில் போடுவதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். இந்த பணம் பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் வட்டியுடன் திருப்பித் தரப்படுகிறது. இந்த முறை, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள நல்ல முறையாக கருதப்படுகிறது.


FD அல்லது RD – எதில் முதலீடு செய்வது?


FD மற்றும் RD இரண்டுமே நல்ல சேமிப்பு முறைகள்தான். ஒரெ நேரத்தில் உங்களிடம் பெரிய தொகை இருந்தால் நீங்கள் FD-ஐ தேர்ந்தெடுக்கலாம். உங்களிடம் சேகரிக்கப்பட்டுள்ள தொகை மொத்தமாக இல்லையென்றால், உங்களுக்கு RD சரியான தேர்வாக இருக்கும். ஏனெனில் இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் பணம் டெபாசிட் செய்தால் போதும்.


ALSO READ: Budget 2021: அடுத்த நிதியாண்டில் சுகாதார செலவினங்களை அதிகரிக்கக்கூடும் மத்திய அரசு


FD மற்றும் RD-ன் கால அளவு என்ன


ஒரு வாடிக்கையாளர் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை FD-ல் முதலீடு செய்யலாம். RD-ல் நீங்கள் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.


FD மற்றும் RD-ல் குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்


ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் திறந்த பிறகு, நீங்கள் FD அல்லது RD ஐத் தொடங்கலாம். நீங்கள் விரும்பினால், 100 ரூபாய் கூட RD-ல் முதலீடு செய்யலாம். அதே போல், FD-யிலும், வாடிக்கையாளர் தனது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு மொத்த தொகையை முதலீடு செய்யலாம்.


FD மற்றும் RD-ன் வட்டி விகிதங்கள்


FD மற்றும் RD இரண்டிலும் வட்டி விகிதங்கள் வேறுபடுகின்றன. Fixed Deposit-ல் 2.35 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. இது வங்கி மற்றும் நேரத்தின் அடிப்படையில் மாறுபடும். Recurring Deposit-ன் வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக மாறுபடும்.


ALSO READ: Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR