Bank Holidays in March 2021: வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை இருக்கும்
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், வங்கிகளில் 11 நாட்களுக்கு எந்த வேலையும் இருக்காது. 4 ஞாயிறு மற்றும் 2 சனிக்கிழமைகளைத் தவிர, மகாசிவராத்திரி மற்றும் ஹோலி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்படும். இது தவிர, வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தமும் உள்ளது.
புதுடில்லி: பிப்ரவரி மாதம் முடிவடைய உள்ளது, நீங்கள் வங்கி தொடர்பான வேலை ஏதேனும் அடுத்த மாதத்திற்கு அதாவது மார்ச் (March) மாதத்திற்கு ஒத்திவைத்திருந்தால், விடுமுறை நாட்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் வங்கிக்குச் செல்ல நினைக்கும் நாளில், வங்கியின் பூட்டு தொங்குவதை காண நேரிடலாம். எனவே மார்ச் மாதத்தில் எந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் (Bank Holidays in March 2021)என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது நல்லது .
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை பட்டியலின் அடிப்படையில், ஹோலி, மகாஷிவராத்திரி உட்பட மார்ச் மாதத்தில் மொத்தம் 11 நாட்கள் வங்கிகளில் விடுமுறையாக இருக்கும். இவற்றில், வங்கிகள் மார்ச் 5, மார்ச் 11, மார்ச் 22, மார்ச் 29 மற்றும் மார்ச் 30 ஆகிய தேதிகளில் மூடப்பட்டு இருக்கும். இது தவிர, 4 ஞாயிறு மற்றும் 2 சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதாவது, மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகளில் எந்த வேலையும் இருக்காது.
ALSO READ | SBI Alert: 22% க்கும் அதிகமான வருமானத்தை வழங்கும் ஸ்டேட் பாங்கின் அசத்தல் திட்டம்
மார்ச் 5, 2021: மிசோரத்தில் உள்ள வங்கிகளுக்கு உள்ளூர் விடுமுறை.
11 மார்ச் 2021: மகாசிவராத்திரி.
22 மார்ச் 2021: பீகார் தினம் பீகாரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
29 மற்றும் 30 மார்ச் 2021: ஹோலி விடுமுறை.
இந்த விடுமுறை நாட்களைத் தவிர, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 9 ஊழியர்களின் யூனியன்கள் (UFBU) மார்ச் 15 முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. பட்ஜெட் உரையில் முதலீட்டு திட்டத்தின் கீழ் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் குறித்து வங்கி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
புதிய நிதி ஆண்டு 2021-22 மார்ச் மாத தொடக்கத்தில் தொடங்க உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், விடுமுறை நாட்கள் காரணமாக வங்கியின் கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், உங்கள் பணிகளை இணைய வங்கி சேவை மூலம் மேற்கொள்ள முடியும். மாநிலங்களுக்கு ஏற்ப வங்கி விடுமுறைகள் மாறுபடும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. எனவே, அனைத்து வாடிக்கையாளர்களும் இதை மனதில் வைத்து வங்கி தொடர்பான தங்கள் வேலையைத் திட்டமிட வேண்டும்.
ALSO READ | உங்கள் பேஸ்புக் ப்ரொபைலை யார் பார்த்தார்கள் என்பதை அறிய உதவும் Tech Tips..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR