Aadhaar Card Photo Update: ஆதார் அட்டை இப்போது உங்கள் அடையாளத்தின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது, மேலும் அடையாளத்திற்காக மட்டுமல்ல, பெரும்பாலான முக்கியமான பணிகளுக்கும் காட்டப்பட வேண்டியது கட்டாயமாகும். ஆனால், ஆதார் அல்லது வாக்காளர் அட்டை தயாரிக்கும் போது எடுக்கும் புகைப்படத்தை மாற்ற வேண்டிய தேவை ஒரு கட்டத்தில் அனைவருக்கும் ஏற்படும். மிகவும் பழைய போட்டோ என்றாலோ, அல்லது அதில் உள்ள புகைப்படம் பிடிக்காமல் இருப்பதாலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்திற்காக, உங்கள் புகைப்படத்தை மாற்ற விரும்பினால், ஆதாரில் புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய வழியை  அறிந்து கொள்ளலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புகைப்படத்தை மாற்ற ஆன்லைன் வசதி இல்லை


இன்றைய காலகட்டத்தில், ஆதார் அட்டை என்பது உங்கள் அடையாளத்தின் மிகப்பெரிய ஆவணம் மட்டுமல்ல, அது அனைத்து நிதி நோக்கங்களுக்கும் கட்டாயமாகிவிட்டது. வங்கிக் கணக்கு தொடங்குவது, பள்ளியில் குழந்தை சேர்க்கை செய்வது, நிலம் அல்லது வீடு ஒப்பந்தம் செய்வது அல்லது அரசு நடத்தும் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வது என எல்லா இடங்களிலும் இந்த ஆதார் அட்டை அவசியம். இத்தகைய சூழ்நிலையில், புகைப்படங்கள் பொருத்தவில்லை என்றால் சிரமத்தை சந்திக்க நேரிடும். இந்த சிக்கலில் இருந்து விடுபட, இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அதாவது UIDAI ஆனது பயனர்கள் தங்கள் புகைப்படத்தை  அப்டேட் செய்து கொள்ளும் வசதியையும் வழங்கியுள்ளது. இருப்பினும், இந்த வேலையை ஆன்லைனில் செய்ய முடியாது.


ஆதார் மையத்தில் கிடைக்கும் சேவை


பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து, உங்கள் புகைப்படம் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இது உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. அட்டையில் உங்கள் பழைய புகைப்படத்தை மாற்றவும், புதிய புகைப்படத்தை நிறுவவும், உங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும். உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டறிய, UIDAI இணையதளத்திற்குச் சென்று (appointments.uidai.gov.in) அருகிலுள்ள அனைத்து ஆதார் மையங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.


மேலும் படிக்க | 50 ரூபாயில் PVC ஆதார் அட்டை... கிழியாது... சேதம் ஆகாது... விண்ணப்பிக்கும் முறை!


புகைப்படத்தை மாற்ற 100 ரூபாய் கட்டணம் 


இணையதளத்தில் உங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்தைக் கண்டறிந்த பிறகு, நீங்கள் அங்கு சென்று கவுண்டரில் இருந்து புகைப்படத்தைப் புதுப்பிப்பது தொடர்பான படிவத்தை வாங்க வேண்டும். இதற்குப் பிறகு, படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் கவனமாகப் படித்து பூர்த்தி செய்து மீண்டும் நியமிக்கப்பட்ட கவுண்டரில் சமர்ப்பிக்கவும். இதற்குப் பிறகு, அங்கு இருக்கும் ஆபரேட்டர் உங்கள் புதிய புகைப்படத்தை எடுத்து, புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுடன் ஒரு சீட்டை உருவாக்கி உங்களுக்குத் தருவார். புகைப்படம் புதுப்பிக்கப்பட்ட பிறகு, புதிய புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை uidai.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த சேவைக்கு நீங்கள் 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த படிவத்தை இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.


புதுப்பிக்கப்பட்ட ஆதாரை வீட்டில் அமர்ந்து பதிவிறக்கலாம்


ஆதார் தரவு புதுப்பிக்கப்பட்டதும், யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். ஆன்லைனில் ஆதாரை அணுக, உங்கள் மொபைல் எண்ணை அதில் பதிவு செய்ய வேண்டும். அதன் செயல்முறை மிகவும் எளிதானது, இதனை  வீட்டில்  இருந்தபடியே செய்யலாம்.


1. www.uidai.gov.in க்குச் சென்று, ஆதார் பதிவிறக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.


2. புதிய பக்கத்தில், ஆதார் எண் அல்லது பதிவு ஐடி அல்லது விர்ச்சுவல் ஐடியை உள்ளிடவும்.


3. கேப்ட்சா குறியீட்டை சமர்ப்பித்து, அனுப்பு OTP விருப்பத்தை கிளிக் செய்யவும்.


4. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
5. ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்த OTP ஐ உள்ளிட்டு சரிபார்த்து பதிவிறக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.


6. இந்த வழியில் புதுப்பிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய உங்கள் இ-ஆதார் பதிவிறக்கம் செய்யப்படும்.


மேலும் படிக்க | HDFC Bank: MCLR விகிதத்தை அதிகரித்தது HDFC... கடனுக்கான EMI அதிகரிக்குமா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ