மத்திய அரசும், மாநில அரசுகளும் பெண்களின் நலனிற்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கல்வி முதல் திருமணம் வரை அனைத்து நிலைகளிலும், பலன அளிக்கும் வகையில் திட்டங்களை கொண்டுவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Arundhati Gold Scheme: அருந்ததி தங்கத் திட்டம் மூலம் உங்கள் செல்ல மகளின் திருமணத்திற்கான பரிசாக அரசாங்கம் 10 கிராம் தங்கத்தை வழங்கி வருகிறது. ஆனால் நிதி பிரச்சினைகள் காரணமாக தங்கள் மகள்களுக்கு தங்கம் கொடுக்க முடியவில்லையே என நீங்கள் வருந்த வேண்டாம். 


இப்போது ஒரு மகள் திருமணத்திற்கு அரசாங்கம் 10 கிராம் தங்கத்தை பரிசாக வழங்கும்.


மகள்களை வளர்ப்பதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் (State Government) பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அஸ்ஸாம் அரசால் நடத்தப்படும் அருந்ததி தங்கத் திட்டமும் இதில்அடங்கும். இதில், மகளின் திருமணத்திற்கு மாநில அரசின் பரிசாக 10 கிராம் தங்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அருந்ததி திட்டம் கடந்த ஆண்டு அசாம் அரசால் தொடங்கப்பட்டது. 


இரண்டு மகள்கள் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படும். அதாவது, ஒருவருக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மகள்கள் இருந்தால், அவர்களுக்கு, அஸ்ஸாம் (Assam) அரசின் இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது


இந்தத் திட்டத்தின் பலனை பெற, மணமகளின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.


ALSO READ | GOOD NEWS: சாலை பாதுகாப்போடு, DL வாங்குவதும் எளிதாகும்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR