எல்ஐசி நிறுவனம் அதன் பாலிசிதாரர்களின் நலனை கருத்திற்கொண்டு வாட்ஸ்அப் சேவையைத் அறிமுகப்படுத்தியுள்ளது, எல்ஐசி வழங்கும் இந்த வாட்ஸ் அப் சேவையானது எல்ஐசி போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும்.  இதுகுறித்து ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ள செய்தியில், "எல்ஐசி போர்ட்டலில்  பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள், 8976862090 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் "ஹாய்" என்கிற செய்தியை அனுப்பி இந்த சேவைகளைப் பயன்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளது.  வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த விரும்பும் பாலிசிதாரர்கள், எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 8976862090 என்பதற்கு “ஹாய்” என்று மெசேஜ் அனுப்பவேண்டும், பின்னர் சாட்போட்டில்  கொடுக்கப்பட்ட சேவைகளின் பட்டியலிலிருந்து நீங்கள் விரும்பும் ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Old Income Tax Regime Vs New: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன? 


வாட்ஸ்அப்பில் கிடைக்கும் எல்ஐசி சேவைகளின் பட்டியல்:


1) செலுத்த வேண்டிய பிரீமியம்
2) போனஸ் பற்றிய தகவல்கள் 
3) பாலிசியின் நிலை
4) கடன் தகுதிக்கான கொட்டேஷன் 
5) கடன் திருப்பிச் செலுத்துவதற்கான கொட்டேஷன் 
6) கடனுக்கான வட்டி செலுத்தும் தகவல்
7) பிரீமியம் செலுத்திய சான்றிதழ்
8) ULIP -  யூனிட்களின் ஸ்டேட்மென்ட் 
9) எல்ஐசி சர்விஸ் இணைப்புகள்
10) ஆப்ட் இன்/ ஆப்ட் அவுட் சேவைகள் 


மேலும் இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பில் தங்கள் கிரெடிட் ஸ்கோரை இலவசமாக சரிபார்க்க அனுமதிக்கிறது.  எல்ஐசி 2022 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை தனிநபர் பிரிவில் 83,59,029 பாலிசிகளை விற்பனை செய்துள்ளது மற்றும் செப்டம்பர் 30, 2021-ல் முடிவடைந்த ஆறு மாத காலப்பகுதியில், எல்ஐசி 73,61,410 பாலிசிகளை விற்றதாக கூறியுள்ளது.


மேலும் படிக்க: Aadhaar Mobile Link: ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை எப்படி இணைப்பது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ