How To Check Name In Voter List Step By Step Elections Voting : கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு தேர்தல் தேதிகள் விவரம் | Tamil Nadu Election Dates Details:
மக்களவை தேர்தல் தேதிகள் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். 


நாடு முழுவதும் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் முதல் கட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதியிலேயே விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.


மேலும் படிக்க | EPF சந்தாதாரர்களுக்கு ரூ. 50,000 போனஸ்: இதை உடனே செய்து விடுங்கள்!!


மக்களவை தேர்தல் 7 கட்டங்கள் | Lok Sabha Elections 7 phases Dates:


முதல் கட்டம்: ஏப்ரல் 19
இரண்டாவது கட்டம்: ஏப்ரல் 26
மூன்றாவது கட்டம்: மே 7
நான்காவது கட்டம்: மே 13
ஐந்தாவது கட்டம்: மே 20
ஆறாவது கட்டம்: மே 25 
ஏழாவது கட்டம்: ஜூன் 1
தேர்தல் முடிவுகள்: ஜூன் 4


இந்நிலையில் தற்போது இந்த தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியமாகும். வாக்களிக்க, இந்த நபரின் பெயர் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் பட்டியலில் இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், இந்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை இங்கே சரிப்பார்க்கவும்.


வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்ப்பது | How To Check Name In Voter List:


* வாக்களிக்கும் தேதிக்கு முன் உங்கள் ஆவணங்களைச் சரிபார்க்கவும். உங்கள் வாக்காளர் பதிவைச் சரிபார்க்க வாக்காளர் சேவை போர்ட்டலைப் பார்வையிடலாம்.



வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க வேண்மெனில், முதலில், தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nvsp.in ஐப் பார்வையிடவும் மற்றும் படிவம் 6 ஐ கிளிக் செய்யவும். கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் நிரப்பவும். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். 


இது தவிர, வாக்காளர் பட்டியலில் சில மாற்றங்களைச் செய்ய விரும்பினால், www.nvsp.in ஐப் பார்க்கவும். அதன் முகப்புப்பக்கத்தில் ‘Correction of entries in electoral roll’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இறுதியாக, தேவையான விவரங்களை நிரப்பவும்.


வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா? எப்படி சரிபார்க்க வேண்டும்?
வாக்காளர் சேவை போர்ட்டலுக்குச் செல்லவும்.
வெப் பிரவுஜரில் https://electoralsearch.eci.gov.in/ ஐப் பார்வையிடவும்.
உங்கள் பெயரைக் கண்டறிய கொடுக்கப்பட்ட விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மூன்று விருப்பங்கள் தோன்றும்: விவரங்கள் மூலம் தேடுங்கள், EPIC மூலம் தேடுங்கள் மற்றும் மொபைல் மூலம் தேடுங்கள்.
விவரங்கள் மூலம் தேடுங்கள்: பெயர், குடும்பப்பெயர், பிறந்த தேதி போன்ற தேவையான தகவல்களை நிரப்பவும்.
இப்போது கேப்ட்சாவை உள்ளிட்டு தேடலைக் கிளிக் செய்யவும்.
EPIC மூலம் தேடுங்கள்: மொழி, EPIC எண் (வாக்காளர் அட்டையில் உள்ளது), மாநிலம், கேப்ட்சா ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல் மூலம் தேடுங்கள்: மாநிலத்தையும் மொழியையும் தேர்ந்தெடுக்கவும். வாக்காளர் ஐடி மற்றும் கேப்ட்சாவுடன் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளிட்டு தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.



தேடல் முடிவுகளில் உங்கள் பெயர் இருந்தால், தேர்தல் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுக்கும்.


மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் இருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு பணம் வரை எடுக்க முடியும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ