LPG Gas Cylinder Rate: புத்தாண்டில் மக்களுக்கு முதல் நாளிலேயே ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்துள்ளது. இருப்பினும், இந்த நிவாரணம் வணிக ரீதியான சிலிண்டர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதாவது, 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LPG Commercial Cylinder: தற்போதைய விலை என்ன?


வர்த்தக சிலிண்டர்கள் இன்றைய விலை குறைப்பிற்கு பிறகு, 19 கிலோ வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் தலைநகர் டெல்லியில் ரூ.1804க்கு கிடைக்கும். முன்பு இதன் விலை ரூ.1818.50 ஆக இருந்தது. சென்னையில் விலை ரூ.1,966 ஆகவும், மும்பையில்  ரூ.1,756, கொல்கத்தாவில் ரூ.1,911 ஆகவும் உள்ளது. 


மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் குட் நியூஸ்: அதிரடி ஓய்வூதிய உயர்வு விரைவில்


இது தவிர, புத்தாண்டில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டு விமான நிறுவனங்களுக்கும் பெரும் பரிசு வழங்கப்பட்டுள்ளது. OMC எனப்படும் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள், ஜனவரி 1 முதல் விமான எரிபொருளின் விலையை குறைத்துள்ளன. வழக்கமான மாதாந்திர புதுப்பிப்புகளின் ஒரு பகுதியாக விமான எரிபொருள் விலைகள் ஜனவரி 1, 2025 அன்றும் திருத்தப்படும். இந்த மாற்றம் விமான டிக்கெட் விலைகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய எரிபொருள் விலையைப் பொறுத்து அதிகரிக்கும். 


LPG Domestic Cylinder: தற்போதைய விலை என்ன?


டிசம்பரில் விமான எரிபொருளின் ஏடிஎஃப் விலையில் நிவாரணம் கிடைத்தது. நவம்பர் மாதத்திலும் விலை லிட்டருக்கு ரூ.2941.5 அதிகரித்துள்ளது.


வீட்டு உபயோக சினிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தலைநகர் டெல்லியில், 14 கிலோ கிராம் வீட்டு உபயோக சிலிண்டர்கள் ஆகஸ்ட் 1, 2024 அன்று இருந்த அதே விலையில் கிடைக்கும். வீட்டு உபயோக சிலிண்டர் சென்னையில் விலை ரூ.818.50 ஆகவும்,  மும்பையில் ரூ.802.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.829 ஆகவும் உள்ளது. 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் அகவிலைப்படி உயர்வு: எவ்வளவு, எப்போது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ