இல்லத்தரசிகள் தலையில் இடி, சிலிண்டர் விலை மீண்டும் உயர்கிறதா?
Gas Cylinder Price Hike: அடுத்த வாரம் எல்பிஜி சிலிண்டரின் (LPG Price Hike) விலை அதிகரிக்கூடும் தகவல் வெளியாகி உள்ளது.
Gas Cylinder Price Hike: அடுத்த வாரம் எல்பிஜி சிலிண்டரின் (LPG Price Hike) விலை அதிகரிக்கூடும் தகவல் வெளியாகி உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோ டீசல் விலையை தொடர்ந்து, தற்போது கேஸ் சிலிண்டர் விலையும் உயரும் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலையைத் (Petrol-Diesel Price) தினமும் உயர்த்தி வரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், சமையல் சிலிண்டர் விலையை அரசின் ஒப்புதலுக்குப் பின்பு தான் உயர்த்துகிறது. இதன் அடிப்படையில் சர்வதேச விலைக்கு நிகராக எரிவாயு விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எரிவாயு நிறுவனங்கள்.
ALSO READ | ஆதார் இல்லாமலும் LPG சிலிண்டருக்கான மானியம் பெற முடியும் - இதோ முழு விவரம்!
எல்பிஜி விலைக்குக் குறைவாக விற்பதால் ஏற்படும் இழப்பு ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாயை எட்டியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எல்பிஜி (LPG) சிலிண்டரின் விலை எவ்வளவு உயரும் என்பது அரசின் அனுமதியைப் பொறுத்தே அமையும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக அக்டோபர் 6ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் (LPG Cylinder) விலை 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜூலை மாதம் முதல் வீட்டில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை கிட்டதட்ட 90 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் சவுதி எல்பிஜி விலை இந்த மாதம் மட்டும் சுமார் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு டன் எல்பிஜி வாயு விலை 800 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் புதிய மானிய திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை, அதே வேளையில் விலையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
தற்போது டெல்லி மற்றும் மும்பையில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.899.50 ஆக உள்ளது. அதே சமயம் கொல்கத்தாவில் ரூ.926 ஆக உள்ளது. அதேசமயம் சென்னையில் 915.5 ரூபாய் ஆக உள்ளது. தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மோடி அரசு அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
ALSO READ: Cheapest Cars: இந்தியாவின் டாப் 5 மலிவு விலை மின்சார கார்களின் விலை, பிற விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR