டெல்லி-உத்தரப்பிரதேசத்தில் குழாய் வழியாக வீடுகளுக்கு வழங்கப்படும் LPG (PNG) விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LPG (PNG) விலையை குறைக்க IGL முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது, ​​டெல்லியில் PNG விலை யூனிட்டுக்கு 90 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பை அடுத்து தற்போது SCM ஒன்றுக்கான விலை ரூ .30.10-ஆக இருக்கும். இதேபோல், உத்தரபிரதேசத்தில், PNG விலை யூனிட்டுக்கு 40 பைசா குறைக்கப்பட்டுள்ளது.


இப்போது உ.பி.யில், புதிய எரிவாயு விலை SCM ஒன்றுக்கு ரூ .30.10-ஆக இருக்கும். புதிய விலைகள் இன்று முதல் பொருந்தும் என்று கருதப்படுகிறது. அதற்கு முன், மும்பையில் SCM மற்றும் PNG விலைகள் குறைக்கப்பட்டன. 


பொதுத்துறை நிறுவனம் மகாநகர் கேஸ் லிமிடெட் (MGL) CNG மற்றும் PMG விலைகளை குறைத்துள்ளது. இந்த விலக்கு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவின் விலையில் கடும் குறைப்பு ஏற்பட்ட பின்னர் MGL இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்., "மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், CNG-யின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 2.04-ஆகவும், PNG-யின் நிலையான கன மீட்டருக்கு (SCM) ரூ .1.19 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது." இருப்பினும், PNG மற்றும் CNG விலைகளில் இந்த வெட்டுக்கள் ஏன் செய்யப்பட்டன என்பது குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை, என்றபோதிலும் இது சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்பது உறுதி.