சானிடைசர் திரவத்திலிருந்து மதுபானம் தயாரித்ததாக MP ஆண் கைது!
சானிடைசர் திரவத்திலிருந்து மதுபானம் தயாரித்ததாக மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சானிடைசர் திரவத்திலிருந்து மதுபானம் தயாரித்ததாக மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கை சுத்திகரிப்பானின் முக்கிய அங்கமாக ஆல்கஹால் உள்ளது. இந்நிலையில் இந்த முக்கிய அங்கத்தை, பிரதனா மூலப்பொருளாக கொண்டு மது பானம் தயாரித்துள்ளார் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர்.
குற்றம் சாட்டப்பட்டவர் சுல்தான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போரியா ஜாகிர் கிராமத்தில் வசிக்கும் இந்தல் சிங் ராஜ்புத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொரோனா அச்சத்தால் நாடு தற்போது முழ அடைப்பில் இருக்கும் நிலையில், மாநிலத்தில் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. மதுபான கடைகளின் இடைவெளி, இவரை சுய தயாரிப்பு மதுபானம் தயாரிக்க தூண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிக தேவை உள்ள சானிட்டீசர்களை தயாரிக்க மாநிலத்தில் பல டிஸ்டில்லரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை தனக்கு சாதகாம பயன்படுத்திக்கொண்ட ராஜ்புத் 72 சதவீத ஆல்கஹால் கொண்ட ஒரு சானிட்டீசரில் இருந்து மதுபானம் தயாரித்துள்ளார். மேலும் தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்.
இது ஒரு தனித்துவமான வழக்கு என்று காவல்துறை சூப்பிரண்டு மோனிகா சுக்லா கூறுகிறார். மற்றும் ராஜ்புத் மீது கலால் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அடுத்தக்கட்ட விசாரணை நடைப்பெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.