Major Changes From September 1, 2024: ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் ஏதாவது முக்கிய மாற்றங்கள் இருக்கும். இவற்றின் தாக்கம் நிதி ரீதியாகவோ அல்லது செயல் ரீதியாகவோ நம் மீது இருக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதலும், பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் சாமானியர்கள் மீது நிச்சயமாக இருக்கும். இந்த மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை மற்றும் கிரெடிட் கார்டு விதிகளும் அடங்கும். மேலும், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான சிறப்பு அறிவிப்புகளும் இந்த மாதம் வரக்கூடும். செப்டம்பர் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம்? இவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்பிஜி சிலிண்டர் விலை


ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் விலையை (LPG Cylinder Price) அரசு மாற்றுகிறது. வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றங்கள் செய்யப்படலாம். இம்முறையும் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.8.50 அதிகரித்தது. ஜூலையில் அதன் விலை ரூ.30 குறைந்தது.


ATF மற்றும் CNG-PNG விகிதங்கள்


எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளுடன், எண்ணெய் சந்தை நிறுவனங்கள் ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜி ஆகியவற்றின் விலைகளையும் மாத துவக்கத்தில் திருத்துகின்றன. இதன் காரணமாக, செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த விலைகளிலும் மாற்றங்கள் இருக்கக்கூடும். 


போலி அழைப்புகள் தொடர்பான விதிகள்


செப்டம்பர் 1ம் தேதி முதல் போலி அழைப்புகள் (Fake calls) மற்றும் செய்திகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும். போலி அழைப்புகள் மற்றும் போலி செய்திகளை கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI அறிவுறுத்தியுள்ளது. இதற்காக டிராய் கடுமையான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள், ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை, 140 மொபைல் எண்களில் தொடங்கும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் மற்றும் வணிக செய்திகளை பிளாக்செயின் அடிப்படையிலான டிஎல்டி அதாவது விநியோகிக்கப்பட்ட லேசர் தொழில்நுட்ப தளத்திற்கு அனுப்ப TRAI கேட்டுக் கொண்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் போலி அழைப்புகள் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | கோடீஸ்வரராக ஓய்வுபெற மாதா மாதம் EPF கணக்கில் எவ்வளவு பங்களிக்க வெண்டும்? கணக்கீடு இதோ


கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள்


எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank), செப்டம்பர் 1 முதல் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கான வெகுமதி புள்ளிகளின் வரம்பை நிர்ணயிக்க உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் இந்த பரிவர்த்தனைகளில் மாதத்திற்கு 2,000 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும். மூன்றாம் தரப்பு செயலிகளின் மூலம் கல்விக் கட்டணங்களுக்காக பணம் செலுத்துவதற்கு HDFC வங்கி எந்த வெகுமதியையும் வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அகவிலைப்படி


செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக், அதாவது அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு இந்த மாதம் வெளியாகக்கூடும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் இரண்டும் 3% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 53% ஆக அதிகரிக்கும். 


ஆதார் அட்டை இலவச புதுப்பிப்பு


ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான (Aadhaar Card Free Update)  கடைசி தேதி செப்டம்பர் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பிறகு, ஆதார் தொடர்பான சில அம்சங்களை இலவசமாகப் புதுப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 14-ம் தேதிக்குப் பிறகு, ஆதாரை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டி வரும். முன்னதாக, ஆதாரை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி 14 ஜூன் 2024 ஆக இருந்தது. தற்போது இது செப்டம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ