அலர்ட்! மார்ச் 31க்குள் இந்த வேலைகளை முடிச்சுருங்க, இல்லையென்றால் சிக்கல் தான்
2023-24 நிதியாண்டு இன்றுடன் முடிவடையும் நிலையில், வரி செலுத்துவோருக்கு மார்ச் 31 ஒரு முக்கியமான தேதியாக உள்ளது. இந்த தேதிக்குள் சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும்.
Major Changes From After March 31, 2024 : நடப்பு நிதியாண்டு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், இன்றுக்குள் அதாவது மார்ச் 31 ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகளை பற்றி நினைவில் வைத்து அவற்றை செய்து முடிக்க வேண்டியது அவசியமாகும். அவை என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
அப்டேடட் ஐடிஆர் தாக்கல் | Updated ITR Filing :
ITR (Income Tax Return) இல் புதுப்பிக்கப்பட்ட விவரங்களைப் பற்றி குறிப்பிட விரும்பும் வரி செலுத்துவோர் இன்றுக்குள் புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் (Income Tax) கணக்கை தாக்கல் செய்துக் கொள்ளலாம். FY 2020-21 (AY 2021-22) ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை இந்தத் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.
ஜிஎஸ்டி காம்போசிஷன் ஸ்கீம் | GST Composition Scheme :
ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் 2024-25 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி (Goods and Services Tax) காம்போசிஷன் திட்டத்திற்கு மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கலாம். வணிக வரி செலுத்துவோர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். CMP-02 படிவத்தை நிரப்ப வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 1.5 கோடியாக உள்ள ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். சில சிறப்புப் பிரிவின் கீழ் இது ரூ.75 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது.
FASTag KYC அப்டேட் | FASTag KYC Update :
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAI (National Highways Authority of India) பயனர்கள் Fastag இன் KYC விவரங்களை புதுப்பிக்க மார்ச் 31 வரை அவகாசம் அளித்துள்ளது. இதற்கு நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷனின் இணையதளம் அல்லது இந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்டின் போர்ட்டலுக்குச் சென்று தங்கள் ஃபாஸ்டாக்கின் KYC விவரங்களைப் புதுப்பிக்கலாம். இதைச் செய்யவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் உங்கள் Fastag கணக்கும் சாதனமும் செல்லாததாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வரி சேமிப்பு முதலீடு | Tax Saving Investment :
2023-24 நிதியாண்டுக்கான பழைய வரி முறையில் நீங்கள் வரிகளை தாக்கல் செய்கிறீர்கள் என்றால், உங்கள் முதலீடுகளுக்கு வரி விலக்கையும் கோரலாம். இதற்கான வரிச் சேமிப்புத் திட்டங்களில் இதற்கு முன் முதலீடு செய்யவில்லை என்றால், மார்ச் 31க்குள் முதலீடு செய்து வரியைச் சேமிக்கலாம்.
குறைந்தபட்ச முதலீட்டு காலக்கெடு | Minimum Deposit :
PPF (Public Provident Fund) மற்றும் SSY (Sukanya Samriddhi Yojana) போன்ற அரசாங்க சேமிப்புத் திட்டங்களுக்குத் அபராதத்தைத் தவிர்க்க குறைந்தபட்ச வருடாந்திர முதலீடு தேவைப்படுகிறது. மார்ச் 31க்குள் குறைந்தபட்ச முதலீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்து, அபராதம் ஏதுமின்றி உங்கள் கணக்கைச் செயல்படுத்த வேண்டும். PPF இல் குறைந்தபட்சம் 500 ரூபாய் மற்றும் SSY இல் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதைச் செய்யாவிட்டால், உங்கள் கணக்கு டீஃபால்ட் கணக்காக அறிவிக்கப்பட்டு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ