இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏறுமுகத்தில் துவங்கியுள்ளன. முக்கிய உலக நாடுகளின் சந்தை குறியீடுகளை ஒட்டியே இந்திய பங்குச்சந்தை குறியீடுகளும் இன்று வர்த்தகத்தைத் துவக்கியுள்ளன. இன்று காலை 9:50 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான Sensex 156.97 புள்ளிகள் உயர்ந்து 38,079.76 என்ற அளவிலும் தேசிய பங்குச்சந்தை குறியீடான Nifty 55.15 புள்ளிகள் அதிகரித்து 11,187.00 என்ற அளவிலும் இருந்தன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை சிங்கப்பூர் பங்குச்சந்தை குறியீடான SGX Nifty நேற்றைய அளவுகளை விட உயர்ந்த நிலையிலேயே துவங்கியது.


உலகளாவிய நிலையில் கூடுதல் நிதி அனுகூலங்கள் கிடைக்கக்கூடும் என்ற எண்ணம் வலுவாகிக்கொண்டிருப்பதால், குறியீடுகள் வலுப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த வரை, கடந்த வாரம் வெள்ளியன்று இலங்கையுடன் ரிசர்வ் வங்கி Currency Swap எனப்படும் நாணய மாற்றுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்ட இந்த ஒப்பனதத்தினால் இந்திய நாணயத்தின் மதிப்பில் என்ன தாக்கம் இருக்கும் என்பது சில நாட்களில் தெரிய வரும் என வல்லுனர்கள் கருதுகிறார்கள்.


ALSO READ: அடுத்த RBI துணை ஆளுநர் யார்? அவரின் சம்பளம் மற்றும் பிற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்


இன்றைய வர்த்தகத்திற்கான Stock Tips:


BPCL, Infosys, TATA Steel, HCL Tech


இன்று தவிர்க்க வேண்டிய Stocks:


HDFC Bank, Yes Bank, ZEEL, TATA Motors


இன்று காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ள சில முக்கிய நிறுவனங்கள்:


Ultratech Cement, Nestle India, Castrol India, IDBI Bank, Yes Bank.


தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. ஆகையால் பெரும்பாலும் டாலர் மதிப்பின் அடிப்படையில் பெரிதும் சார்ந்திருக்கும் நிறுவனங்களை, குறிப்பாக Mid Cap ஐ.டி நிறுவனங்களை சில நாட்களுக்கு தவிர்ப்பது நல்லது. எனினும் Infosys போன்ற பங்குகள் இதற்கு விதிவிலக்காக நல்ல முன்னேற்றத்தைக் காட்டி வருகின்றன.