7வது ஊதியக் குழு, அகவிலைப்படி உயர்வு, சமீபத்திய புதுப்பிப்புகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மற்றொரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவை அதிகரிக்கப் போகின்றன. 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான அகவிலைப்படி (ஜூலை 2023) அதிகரிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வரவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்புக்கு பிறகு ஊழியர்களின் ஊதியத்தில் அதிகப்படியான ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 4 மாத காத்திருப்புக்குப் பிறகு, மீண்டும் ஊழியர்களின் அகவிலைப்படியில் ஏற்றம் ஏற்படப்போகின்றது. ஜூலை 31 மாலை மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், அப்போது ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் வெளியிடப்படும். அதன் பிறகு அகவிலைப்படியில் எவ்வளவு ஏற்றம் இருக்கும் என்பது தெளிவாகும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பரில் வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


அதாவது செப்டம்பர் மாதம் வரை மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீத ஊதியம் வழங்கப்படும். இதற்குப் பிறகு, ஜூலை 2023 இன் அகவிலைப்படி அறிவிக்கப்படும். அரசாங்கம் தற்போது ஊழியகளுக்கு 42 சதவிகித அகவிலைப்படியை செலுத்தி வருகிறது. ஜூலை 2023 முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர இன்னும் சில காலம் எடுக்கலாம். ஆனால், ஜூலை 31 அன்று மாலை ஏஐசிபிஐ தரவுகள் வந்தவுடன், இந்த அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது தெளிவாகிவிடும். 


டிஏ மேலும் 4 சதவீதம் அதிகரிக்கலாம்


ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2023 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளில் இருந்து அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. 4 சதவீதம் அதிகரித்த பிறகு, ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவீதத்தை எட்டும். இது குறித்து செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியை அதிகரிப்பதன் மூலம் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் நல்ல செய்தியை வழங்கும். இதன் அறிவிப்பு வந்த பிறகே ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் கிடைக்கும். எனினும் ஜூலை 2023 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் அரியர் தொகை ஊழியர்களுக்கு கிடைக்கும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: வாவ்!! ஊழியர்களுக்கு மத்திய அரசின் 4 பரிசுகள்... குஷியில் ஊழியர்கள்


46 சதவீதம் அகவிலைப்படி


ஜூலை 2023 இல் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்திருந்தால், ஜூலை 2021 முதல், டிஏ -வில் மொத்தம் 15 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என பொருள். ஜூலை 2021 இல், ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அகவிலைப்படி, ஒரே நேரத்தில் 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு, ஜூலை 2021 இல் 3 சதவீதமும், ஜனவரி 2022 இல் 3 சதவீதமும், ஜூலை 2022 இல் 4 சதவீதமும், பின்னர் 2023 ஜனவரியில் 4 சதவீதமும் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது. தற்போது டிஏ ஒட்டுமொத்தமாக 42 சதவீதத்தை எட்டியுள்ளது. இப்போது ஜூலை 2023 இல், மீண்டும் இது 4 சதவீதம் உயரக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி இப்போது 46 சதவீதத்தை எட்டும். 2021 -ல் இருந்து கணக்கீடு செய்தால், ஒன்றரை வருடத்தில் அகவிலைப்படி சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.


வீட்டு வாடகை கொடுப்பனவிலும் பெரிய ஏற்றம் இருக்கும்


7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படிக்குப் பிறகு, எச்.ஆர்.ஏ., அதாவது வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கும் என்பது உறுதி. இருப்பினும், இந்த உயர்வு அடுத்த அரையாண்டுக்குப் பிறகு, அதாவது அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டியதும் நடக்கும். தற்போது, ​​எச்ஆர்ஏ நகரங்களில் X, Y, Z என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்போது X நகரில் வசிக்கும் மத்திய ஊழியர்களுக்கு எச்ஆர்ஏ அதிகமாகவும், Y மற்றும் Z நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு எச்ஆர்ஏ குறைவாகவும் கிடைக்கிறது. இந்த பிரிவை பொறுத்து 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என வீட்டு வாடகை கொடுப்பனவு கிடைக்கும். அகவிலைப்படி 50%  -ஐத் தாண்டும்போது, ​​X, Y மற்றும் Z  நகரங்களுக்கான எச்ஆர்ஏ முறையே 30%, 20% மற்றும் 10% ஆக அதிகரிக்கப்படும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அரசின் பரிசு... விரைவில் பல கொடுப்பனவுகளில் ஏற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ