புது டெல்லி: எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 2% கூடுதல் வரி ஊக்கத்தொகை திட்டத்தை மீண்டும் அரசாங்கம் கொண்டு வரலாம். மத்திய அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விவகாரம் பிரதமர் அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டது மற்றும் மொத்த மின்னணுவியலில் 4% வர்த்தகத்திற்கான ஊக்கத்தொகையை வணிக ஏற்றுமதி திட்டத்தின் (MEIS) கீழ் தொடர்ந்து அறிவிப்பது குறித்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் (Budget 2020) அறிவிக்கப்படலாம். "MEIS க்கு பதிலாக புதிய திட்டம் செயல்படுத்தப்படும் வரை மின்னணு ஏற்றுமதிக்கான கூடுதல் ஊக்கத்தொகை தொடரும்" என்று ஒரு அதிகாரி கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்றுமதியாளர்களுக்கு உதவ MEIS இன் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூடுதல் இரண்டு சதவீத ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படுவது, வணிகத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். டிசம்பர் 10 ம் தேதி, ஆடை மற்றும் அலங்காரங்களைத் தவிர அனைத்து ஏற்றுமதிகளுக்கும் கூடுதல் ஊக்கத்தொகை டிசம்பர் 31 அன்று முதல் முடிவுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. அடுத்த சில மாதங்களில் ஏற்றுமதி தயாரிப்புகளுக்கான MEIS ஐ மாற்றுவதற்கான வழிகளை வர்த்தக துறை இறுதி செய்து வருகிறது. அதுவரை இந்த 2% கூடுதல் வரி ஊக்கத்தொகை திட்டம் செயல்படும் எனத் தெரிகிறது. 


இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு அரசு அதிகாரி, மின்னணுவிற்கான ஏற்றுமதி ஊக்கத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்துள்ளது என்று கூறினார். இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் கூறுகையில், “மின்னணு ஏற்றுமதி தற்போது மிகக் குறைவு, ஆதரவு தேவை. இங்கு முதலீடு செய்யும் நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதி தளத்தை உருவாக்க முடியும். அதனால் ஊக்கத்தொகை திட்டம் அவசியம் என்று கூறினார். 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.