MSSC Vs SSY: பெண்களுக்கு ஜாக்பாட் வருமானத்தை அள்ளித்தரும் திட்டம் எது?
MSSC Vs SSY: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன? யாருக்கு எது ஏற்றதாக இருக்கும்?
2023 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) எனப்படும் பெண்களுக்கான சிறப்பு சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த சிறு சேமிப்பு திட்டம் குறிப்பாக பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் நிதி வலுவூட்டலுக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக பிரபலமாக உள்ள மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன? யாருக்கு எது ஏற்றதாக இருக்கும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் (MSSC):
• முதலீட்டு காலம்: இரண்டு ஆண்டுகள்.
• முதலீட்டு வரம்பு: குறைந்தபட்சம் ரூ 1000 முதல் அதிகபட்சம் ரூ 2 லட்சம் வரை.
• வட்டி விகிதம்: அரசு 7.5% வட்டி வழங்குகிறது, காலாண்டுக்கு ஒருமுறை இது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
• பணத்தை எடுக்கும் முறை: முதல் ஆண்டு முடிந்தவுடன் கணக்கு வைத்திருக்கும் பெண், மொத்த தொகையில் 40 சதவிகித பணத்தை எடுக்கலாம்.
• கணக்கு முதிர்வு: அக்டோபர் 2023 இல் திறக்கப்பட்டால், அக்டோபர் 2025 இல் கணக்கு முதிர்ச்சியடையும்.
• தகுதி: எந்த வயதினரும் இந்த கணக்கைத் திறக்கலாம்.
• கணக்கு திறப்பு: வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்குச் சென்று, கணக்கு திறப்பு படிவத்தை நிரப்பவும். KYC ஆவணங்களை (ஆதார் மற்றும் பான்) வழங்கவும். பணம் அல்லது காசோலை மூலம் பணத்தை டெபாசிட் செய்யவும்.
மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: கணக்கில் கூடுதல் பணம் வரப்போகுது!!
சுகன்யா சம்ரித்தி யோஜனா
• தகுதி: 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான கணக்கு.
• வட்டி விகிதம்: டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 8% வட்டி.
• முதலீட்டு வரம்பு: ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 1.50 லட்சம் வரை.
• முதலீட்டு காலம்: பெண் குழந்தைக்கு 15 வயது வரை முதலீடு செய்யலாம்.
• பணத்தை எடுக்கும் முறை: 18 வயதில், கல்விக்காக 50% எடுக்கலாம். 21 வயதில் முழுமையாக எடுக்கலாம்.
• வரிச் சலுகைகள்: வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை விலக்கு.
• கணக்கு திறப்பு: எந்த வங்கியிலும் அல்லது தபால் நிலையத்திலும் இந்த கணக்கை திறக்கலாம்.
இரண்டுக்கும் இடையிலான ஒப்பீடு:
1. கால அளவு: MSSC குறுகிய காலத்திற்கானது, SSY நீண்ட காலத்திற்கானது.
2. தகுதி: MSSC கணக்கை அனைத்து வயது பெண்களும் திறக்கலாம், SSY சிறுமிகளுக்கானது.
3. முதலீட்டு இலக்கு: உங்கள் முதலீட்டு இலக்கு, குறுகிய கால இலக்க அல்லது நீண்ட கால இலக்கா என்ற அடிப்படையில் திட்டத்தை தேர்வு செய்யவும்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகிய திட்டங்களுக்கு இடையே தேர்வு செய்ய உங்கள் நிதி இலக்குகள் மற்றும் விருப்பங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
கூடுதல் தகவல்:
இந்திய அஞ்சல் அலுவலகத்தால் பல வகையான பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த அஞ்சலக திட்டங்களில் அதிக ஆபத்து இல்லாததால் இவை மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாக கருதப்படுகின்றன. தபால் அலுவலகம் பெண்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்து பெண்களும் நல்ல வருமானத்தைப் பெறுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ