Reliance Launches Wyzr: எரிசக்தி துறை முதல் இணையம் வரை என இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல் பல முக்கியத் துறைகளில் தனது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனம் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் பல பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக Wyzr என்ற புதிய பிராண்டுடன் களமிறங்கப் போகிறது. தி எகனாமிக் டைம்ஸின் அறிக்கையின்படி, Wyzr என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல் நிறுவனத்தின் சமீபத்திய புதிய முயற்சியாகும். இது இந்தியாவில் அனைத்து இடங்களிலும் அறிமுகப்படுத்தபடும். இதன் மூலம் எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் துறையில் இந்நிறுவனம் நுழைய உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலிவான விலையில் ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி, கூலர்


கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நுகர்வோர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நுகர்வோர் பொருட்களின் பிராண்டான ‘இண்டிபெண்டன்ஸ்’ ஐ அறிமுகப்படுத்தியது. இந்த பிராண்டுடன் குறைந்த விலை மாவு, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 


அதே சமயம், தற்போது மலிவான ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி, கூலர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வர்த்தகத்தில் இறங்க ரிலையன்ஸ் தயாராகி வருகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் வர்த்தகத்தில் நுழைந்துள்ள நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்நிறுவனம் தயாராகி வருகிறது.


மேலும் படிக்க - முகேஷ் அம்பானி மகள் என்றால் சும்மாவா... இஷாவின் மாதம் வருமானம் எவ்வளவு தெரியுமா?


Wyzr பிராண்ட் அறிமுகம்


Wyzr பிராண்டின் கீழ் ஏர் கூலர்கள் ஏற்கனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் சில்லறைப் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் மூலம் வெளியிடப்பட்டது. இது சந்தையில் தனது நிறுவனத்தின் சமீபத்திய பிராண்டான Wyzr அறிமுகத்தைக் குறிக்கும் வகையில் அமைந்தது இதனைத்தொடர்ந்து தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், சிறிய உபகரணங்கள் மற்றும் எல்இடி பல்புகள் வரையிலான பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.


Wyzr பிராண்டின் தயாரிப்புகள் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள், டீலர்கள், பிராந்திய சில்லறை விற்பனை கடைகள், அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற இ-காமர்ஸ் தளங்கள் உட்பட பல தளங்களில் மூலம் கிடைக்கும்.


சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் சான்மினா ஆலை


தகவல்களின்படி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க, ரிலையன்ஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான சான்மினாவில் முதலீடு செய்தது. சான்மினாவின் இந்திய யூனிட்டில் ரூ.1670 கோடி முதலீடு செய்து 50.1 சதவீத ஈக்விட்டியை நிறுவனம் வாங்கியது. 


சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் சான்மினா ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் Wyzr பிராண்ட் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.


மேலும் படிக்க - இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ