NPS Log-In செயல்முறையில் மாற்றம்: ஏப்ரல் 1 முதல் புதிய விதி, முழு தகவல் இதோ
NPS Latest News: ஏப்ரல் 1, 2024 முதல், ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு காரணி அங்கீகார செயல்முறையை ( Two-Factor Authentication) உறுதி செய்யும்.
NPS Latest News: தேசிய ஓய்வூதிய அமைப்பின் (National Pension System) பாதுகாப்பை அதிகரிக்க, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA, புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது. ஏப்ரல் 1, 2024 முதல், NPS சென்ட்ரல் ரெக்கார்ட்-கீப்பிங் ஏஜென்சி (CRA) அமைப்பை அணுகுவதற்கு, தற்போதுள்ள கடவுச்சொல் அடிப்படையிலான உள்நுழைவு முறையுடன் (Password Based Log In Method) ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை ஒருங்கிணைத்து, இரண்டு காரணி அங்கீகாரம் அதாவது டூ ஃபாக்டர் அதண்டிகேஷன் தேவைப்படும்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேம்படுத்தப்பட்ட இந்த பாதுகாப்பு நெறிமுறைக்கு ஏற்ப அரசாங்க நோடல் அலுவலகங்கள் தங்கள் செயல்முறைகளை மாற்ற வேண்டும் என PFRDA இன் சமீபத்திய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த அலுவலகங்கள் ஒரு பாஸ்வர்டை மட்டும் பயன்படுத்தி CRA அமைப்பை அணுக முடியும். ஆனால் தற்போது இந்த அமைப்பின் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2024 முதல், ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு காரணி அங்கீகார செயல்முறையை ( Two-Factor Authentication) உறுதி செய்யும்.
NPS: புதிய செயல்முறை எவ்வாறு செயல்படும்?
- மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழிமுறையின் கீழ், CRA அமைப்பில் லாக் இன் செய்வதற்கு பயனர்கள் தங்களின் தற்போதைய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை தான் பயன்படுத்த வேண்டும்.
- இருப்பினும், இந்த சான்றுகளுக்கு கூடுதலாக, ஆதார் அடிப்படையிலான அங்கீகார செயல்முறை இணைக்கப்படும்.
- இந்த கூடுதல் பாதுகாப்பு அடுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைக் குறைத்து NPS பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் படிக்க | டாப் பணக்காரர்களின் லிஸ்டில் இடம் பெற்ற 4 மாத குழந்தையின் பெயர்! அது எப்படிப்பா?
மேம்படுத்தப்பட்ட அமைப்பின் முக்கிய அம்சங்கள் என்ன?
மேம்படுத்தப்பட்ட அமைப்பின் முக்கிய அம்சங்கள் என்ன? இதனால் பாதுகாப்பு எப்படி மேம்படும்? இதன் மூலம் இந்த செயல்முறைக்கு கூடுதலாக என்ன நன்மை கிடைக்கும்? இவற்றை பற்றி இங்கே காணலாம்.
அங்கீகரிக்கப்படாத நுழைவு அபாயத்தைக் குறைக்கிறது
இரண்டு-காரணி அங்கீகாரத்தின் அறிமுகம் CRA அமைப்பில் அங்கீகரிக்கப்படாத நுழைவின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க உதவும். இந்த செயல்முறை அமலுக்கு வந்த பிறகு, சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே அணுகலைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2FA: கூடுதல் பாதுகாப்பு அடுக்கு
இந்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படுவதன் மூலம், என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) மற்றும் பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தனக்கு இருக்கும் உறுதிப்பாட்டை PFRDA கோடிட்டுக் காட்டியுள்ளது.
ஆதார் இணைப்பு
அரசாங்க நோடல் அலுவலகங்கள் இப்போது தங்கள் ஆதார் சான்றுகளை அவற்றின் CRA பயனர் ஐடிகளுடன் இணைக்க வேண்டும். இந்த இணைப்பு அங்கீகாரத்திற்காக ஆதார் OTP (ஒரு முறை கடவுச்சொல்) பயன்படுத்துவதை செயல்படுத்துகிறது, அதாவது எனேபிள் செய்கிறது.
தடையற்ற NPS செயல்பாடுகள்
பழைய செயல்முறையிலிருந்து புதிய முறைக்கு சுமுகமான வழியில் மாற வேண்டும் என PFRDA கூறியுளது. இதை உறுதி செய்ய, அரசு அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் ஆதார் அடிப்படையிலான உள்நுழைவு மற்றும் அனைத்து NPS தொடர்பான பரிவர்த்தனைகளுக்கான அங்கீகாரத்தையும் எளிதாக்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பை விரைவாக பின்பற்ற வேண்டும் என்று PFRDA மேலும் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ