New tax rules: நாட்டில் வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பணத்தின் பரவலை சமாளிக்கும் பொருட்டு இந்திய அரசு ஒருவரிடம் எவ்வளவு பணம் இருக்கலாம் என்பதற்கான வரம்புகளை விதித்துள்ளது.  வீட்டில் பணத்தை வைத்திருப்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்தது, உங்கள் நிதி திறன் மற்றும் உங்கள் பரிவர்த்தனை பழக்கம்.  மக்கள் தங்களது வீடுகளில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற வரம்புகள் எதுவும் இல்லை, அதனால் மக்கள் அவர்களுக்கு தேவையான பணத்தை வீட்டில் வைத்திருக்கலாம்.  ஆனால் ஒவ்வொரு ரூபாயின் பதிவையும் நீங்கள் வைத்திருக்க. மேலும் உங்கள் வருமானத்தின் ஆதாரம் மற்றும் நீங்கள் உங்கள் வரிகளை செலுத்தியுள்ளீர்களா இல்லையா என்பதற்கான சான்றுகளையும்  நீங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு டிஏ ஹைக் பற்றிய மாஸ் செய்தி, இன்று வருகிறதா அறிவிப்பு?


வருமான வரி விதிகளின்படி ஒருவர் தனது வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.  அதேசமயம் சில காரணங்களுக்காக வருமான வரித்துறையிடம் நீங்கள் அகப்பட நேர்ந்தால் பணம் எப்படி வந்தது என்பதற்கான தகுந்த ஆதாரத்தினை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இதனுடன் நீங்கள் ஐடிஆர் பிரகடனத்தையும் காண்பிக்க வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகள் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ஒருவரது வீட்டில் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பணம் கண்டுபிடிக்கப்பட்டால், வருமான வரித்துறை உங்களுக்கு மொத்தத் தொகையில் 137 சதவீதம் வரை வரி விதிக்கும்.  ரொக்கமாக டெபாசிட் செய்யும்போதோ அல்லது ஒரே நேரத்தில் ரூ.50,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும்போதோ அல்லது ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலோ பான் மற்றும் ஆதார் கார்டை காட்ட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.  நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால் ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


1) ஒரு வருடத்தில் வங்கியில் இருந்து ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் 2% டிடிஎஸ் செலுத்த வேண்டும்.


2) ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.  மேலும் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்களை வாங்கினாலோ மற்றும் விற்றாலோ விசாரணை நடத்தப்படும்.


3) ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் கொடுத்து எதையும் வாங்க முடியாது, ரொக்கமாக கொடுத்தால் பான் மற்றும் ஆதாரைக் காட்ட வேண்டும்.


4) கிரெடிட்-டெபிட் கார்டு மூலம் ஒரே நேரத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செய்தால் விசாரணை பாயும்.


5) ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை பிறரிடமிருந்து ரொக்கமாக வாங்கக்கூடாது, வங்கி மூலம் மட்டுமே வாங்க வேண்டும்.


6) ரூ.20,000 மேல் ரொக்கமாக வேறு யாரிடம் இருந்தும் கடன் வாங்கக்கூடாது.


7) ரூ.2,000க்கு மேல் ரொக்கமாக நன்கொடை அளிக்கவும் முடியாது.


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்... 7ஆவது ஊதியக்குழுவின் கீழ் சம்பள உயர்வு - அறிவிப்பை வெளியிட்ட அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ