புது தில்லி: பொதுத்துறை வங்கிகளின் (Public Sector Banks) எண்ணிக்கையைக் குறைத்து அவற்றை தனியார்மயமாக்குவதற்கான பேச்சு இப்போது வேகம் பெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி அமைச்சகத்தைத் தவிர, இந்த விஷயத்தில் நீதி ஆயோக்கிலிருந்தும் (Niti Aayog) ஆலோசனைகள் வந்துள்ளன. இது செயல்படுத்தப்படக்கூடும் என தெரிகிறது. நீதி ஆயோக்கின் படி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் மகாராஷ்டிரா வங்கி ஆகியவை தனியார்மயமாக்கப்பட வேண்டும். மேலும், நீதி ஆயோக் சார்பாக, அனைத்து கிராமப்புற வங்கிகளையும் இணைப்பது (Rural Banks Merger) குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், NBFC களுக்கு கூடுதல் விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. நீதி ஆயோக்கிலிருந்து வேறு என்ன மாதிரியான பரிந்துரைகள் வந்துள்ளன என்பதையும் பார்க்கலாம்.


நீதி ஆயோக் பரிந்துரைகள்


முதலில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் மகாராஷ்டிரா வங்கி ஆகியவை தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்று நீதி ஆயோக்கிலிருந்து பரிந்துரை வந்துள்ளது. அதன் பிறகு, மற்ற வங்கிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த வங்கிகளைத் தவிர, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை தனியார்மயப்படுத்துவது பற்றி பேசப்படுகிறது.


நாட்டில் 5-க்கும் மேற்பட்ட அரசு வங்கிகளுக்கு எந்த அவசியமும் இல்லை என்று அரசாங்கம் நம்புகிறது. பல வங்கிகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், எஞ்சியிருக்கும் வங்கிகளின் தனியார்மயமாக்கலால் வரும் வருவாய் நாட்டின் வளர்ச்சியில் பயன்படுத்தப்படும்.


கிராமப்புற வங்கிகளின் இணைப்பு


மறுபுறம், நீதி ஆயோக் சார்பாக, அனைத்து கிராமப்புற வங்கிகளையும் இணைப்பது பற்றிய பேச்சு உள்ளது. தகவல்களின்படி, நஷ்டத்தில் இருக்கும் இந்தியா போஸ்ட்டை கிராமப்புற வங்கிகளுடன் அரசாங்கம் இணைக்கக் கூடும் என கடந்த ஒரு வார காலமாக பேசப்படுகின்றது. இதன் பின்னர் உருவாக்கப்படும் புதிய வங்கி இழப்பை நிறைவு செய்யும். இந்தியா போஸ்ட் மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாட்டில் ஒரு பெரிய உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டும் ஒன்றிணைந்தால், இரு தரப்பின் சொத்துகளும் ஒன்றாகிவிடும். தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொண்டு மீதமுள்ளவற்றை விற்பனை செய்வதன் மூலம் நிதி சேகரிக்க முடியும்.


கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்பு


அரசாங்கத்திற்கு ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ளது. கொரோனா வைரஸ் அனைத்து பொருளாதார அம்சங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அரசாங்கம் தனது PSB மற்றும் PSU பிரிவில் இருந்து பங்குகளை விற்று நிதி திரட்ட முயற்சிக்கிறது. வங்கிகளைத் தவிர, ஏர் இந்தியாவின் பெயரும் இந்தப் பட்டியலில் உள்ளது. அதே நேரத்தில், LIC-ன் IPO-வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால்


அரசாங்கத்திற்கு மிகப் பெரிய நன்மை கிடைக்கும். இது ஆசியாவின் மிகப் பெரிய IPO-வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.