புதுடெல்லி: நீங்கள் அடிக்கடி பெட்ரோல் பங்கில் கிரெடிட் கார்டு (Credit Card) மூலம் பணம் செலுத்தி கார் அல்லது பைக் டேங்கை நிரம்பி வருகின்றீர்கள் என்றால், பதற்றப்படாமல் நீங்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும். ஆம், இப்போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல்-டீசல் (Petrol-Diesel) கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கேஸ் பேக் ஆஃபர் கிடைக்காது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 அக்டோபர் 1 முதல், எண்ணெய் நிறுவனங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு வழங்கி வந்த தள்ளுபடியை நிறுத்துகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, பெட்ரோல் பங்கில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை ஊக்குவிக்கும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவீத கேஷ்பேக் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


நடுவண் அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் நாள் இரவு பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க இந்த வசதி மத்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 


நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டு பயனாளர்க்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், கிரெடிட் கார்டு மூலம் பரிவரத்தணையின் போது 0.75 சதவீத கேஷ்பேக் வசதி அக்டோபர் 1 முதல் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்தியில் எழுதப்பட்டுள்ளது. எஸ்பிஐ மட்டுமே தனது வாடிக்கையாளர்களுக்கு இதுக்குறித்த செய்தியை அனுப்பியிருந்தாலும், அனைத்து வங்கிகளின் சார்பிலும் இந்த வசதி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.