கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் திறக்கப்பட்ட இந்திரா கேண்டீன் மூடப்படாது என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்., இந்திரா கேண்டீன் மூடப்படுவதாக வெளியான செய்திகள் தவறானது. அரசின் அறிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘கேன்டீன் மூடப்படும் என வெளியான செய்தி தவறானது, முறைகேடுகளை மட்டுமே கவனிக்கப்பட்டு சீர் செய்யப்படும்’ என்றே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இந்திரா கேண்டீன்களில் 100 பேர் சாப்பிடும் பட்சத்தில், அதற்கு 1000 பேர் சாப்பிட்டதாக கணக்கு காண்பிக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய முறைகேடுகளை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர்., ‘சில கேன்டீன்கள் குறித்து புகார்கள் வந்துள்ளன, குறிப்பிட்ட அந்த கேண்டீன்கள் குறித்து விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன, ஆனால் கேண்டீனை மூடும் எண்ணம் இல்லை. மக்கள் நல்ல தரமான உணவைப் பெற வேண்டும் என்றே அரசாங்கம் விரும்புகிறது’ என தெரிவித்தார். மேலும் இந்திரா காந்தி கேண்டீன் என்னும் பெயரையும் மாற்றும் என்னத்தில் அரசு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் கேண்டீன் மூடப்படாது என்பதை அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார். 


கர்நாடகாவில், இந்திரா கேண்டீனில் காலை உணவு மற்றும் மதிய உணவு இரவு உணவு ஒரு தட்டுக்கு வெறும் ஐந்து ரூபாய் என்ற விகிதத்தில் ரூ .10 க்கு வழங்கப்படுகிறது. கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கேண்டீனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.