சென்னை: பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் தற்போது, அடுத்து வரும் தீபாவளிக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்று பணிபுரிபவர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய கமிஷன் சம்பள உயர்வை அறிவித்தது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு என்ன மகிழ்ச்சியான செய்தி காத்துக் கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு என்று தெரிந்துக் கொள்ள ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றானர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து, டாஸ்மாக் உள்ளிட்ட துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.


அடுத்த மாதம் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால், தீபாவளிக்கு போனஸ் எவ்வளவு அறிவிக்கப்படும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக, பல்வேறு தொழிற்சங்கத்தினரும் தமிழ்நாடு அரசிடம் தங்கள் கோரிக்கையை தெரிவித்து வருகின்றனர்.


அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் குறித்து அண்ணா தொழிற் சங்கத்தினா் தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தலைமை செயலக போக்குவரத்து துறை செயலர் க.பணீந்திர ரெட்டியிடம் தங்கள் கோரிக்கையை தெரிவித்த தொழிற்சங்கத்தினர், அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிபவர்களுக்கு வழக்கமாக தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு 10 சதவீதம் ஊக்கத்தொகையும் சேர்த்து இம்முறை மொத்தமாக 30 சதவீத போனஸ் வழங்கவேண்டும் என்று கேட்டுக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | தீபாவளி போனஸ்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... அறிவிப்பு வெளியானது!!


இந்த போனஸை எந்தவித நிபந்தனைகளும் இன்றி வழங்க வேண்டும் என்று தலைமை செயலக போக்குவரத்து துறை செயலர் க.பணீந்திர ரெட்டியிடம் அண்ணா தொழிற் சங்கத்தினா் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் தமிழக அரசு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளி போனஸ்  வழங்கியபோது, 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை உள்பட 10 சதவீத போனஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் மாத சம்பளம் ரூ.7000 - 21,000 வரை பெறும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு இந்த போனஸ் தொகை அறிவிக்கப்பட்டது. இதற்காக, தமிழக அரசு மொத்தம் ரூ.216 கோடி ஒதுக்கீடு செய்தது.  


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான் மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ